இந்தியாவில் டெலிகாம் துறையின் வளர்ச்சி பல துறைக்கு சாதகமாக அமைந்துள்ளது, இந்த புதிய வளர்ச்சி பாதையில் ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனங்களும் பெரும் வர்த்தகத்தையும், லாபத்தையும் பெற்றுள்ளது. ஆனால் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பிஎஸ்என்எல் நிறுவனம் தேக்கமடைந்து காணப்பட்டது.
கடந்த 3 வருடத்தில் பிஎஸ்என்எல் டாடா குழுமத்துடன் இணைந்து ஜியோ, ஏர்டெல்-க்கு போட்டியாக 4ஜி சேவையை அறிமுகம் செய்து புதிய வாடிக்கையாளர்களை அதிகளவில் பெற்று வரும் வேளையில், தற்போது அடுத்துக்கட்ட வளர்ச்சியில் இறங்கியுள்ளது.

BSNL நிறுவனம் தற்போதைய 4G வலையமைப்பை 5G தொழில்நுட்பத்திற்கு மேம்படுத்த டாடா குழுமத்தின் டெக் சேவை பிரிவான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2ஜி சேவை மட்டுமே அளித்து வந்த பிஎஸ்என்எல் கடந்த 2 வருடமாக நாட்டின் பல பகுதிகளில் 4ஜி சேவையை அறிமுகம் செய்தது, இந்த நிலையில் BSNL 5G சேவை அறிமுகம் செய்ய தயாராகியுள்ளது.
BSNL நிறுவனம் எந்த இடத்தில் இந்த அலைவரிசையில் 5ஜி சேவை அளிக்க வேண்டும் என இறுதி செய்தால் போதும், டாடா குழுமம் 5ஜி சேவை அளிப்பதற்கான பணிகளை மேற்கொள்ளும்.
C-DoT மற்றும் Tejas Networks ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து TCS தலைமையிலான கூட்டமைப்பு தற்போது BSNL க்கான 4G வலையமைப்பை செயல்படுத்தி வருகிறது. இதே கூட்டணி தான் தற்போது 5ஜி சேவை அறிமுகம் செய்ய பணியாற்ற உள்ளது.
டிசிஎஸ் தலைமையிலான கூட்டணி இந்தியா முழுவதும் 1 லட்சம் தளங்களை உள்ளடக்கிய டெலிகாம் நெட்வொர்க்கில், 65,000 தளங்கள் ஏற்கனவே 4ஜி சேவையயை செயல்பாட்டில் கொண்டு வந்துள்ளன. குறிப்பிடத்தக்க வகையில், TCS இந்த வலையமைப்பில் பயன்படுத்தும் டெலிகாம் உபகரணங்கள் அனைத்தும் 5G-ரெடி சேவைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் மென்பொருள் மேம்படுத்தல் மூலமே 5G க்கு மாற முடியும் என்பதால் டாடா குழுமம் BSNL-ன் சிக்னலுக்காக காத்திருக்கிறது. மேலும், C-DoT செயல்படுத்திய கோர் நெட்வொர்க் ஏற்கனவே 5G நான்-ஸ்டாண்ட்அலோன் (NSA) கட்டமைப்பை கொண்டு உள்ளது. இது எளிதான 5G சேவை அறிமுகத்திற்கான அடித்தளத்தை அமைக்கிறது.
BSNL தற்போது 700 MHz, 900 MHz, 2,100 MHz, 2,500 MHz மற்றும் 3,500 MHz உள்ளிட்ட பல அலைவரிசையில் Spectrum வைத்துள்ளது. இதன் மூலம் 5G சேவை அறிமுகம் செய்வதில் எவ்விதமான பிரச்சனையும் இருக்காது.


Click it and Unblock the Notifications