1 வருடத்திற்கு இலவசம்.. Disney + hotstar.. ஜியோ, ஏர்டெல்லின் அதிரடி சலுகைகள்.. எது பெஸ்ட்..!

தொலைத் தொடர்பு நிறுவனங்களில் கொடி கட்டி பறந்து வரும் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள், தங்களில் யார் பெஸ்ட் என்பதை நிரூபிக்க போட்டி போட்டுக் கொண்டு சலுகைளை வாரி வழங்குகின்றன.

தொலைத் தொடர்பு துறையில் நுழைந்த சிறிது காலத்திலேயே தனிக்காட்டு ராஜவாக வலம் வரும் ஜியோ, குறிப்பிட்ட காலத்திலேயே குறிப்பிட்ட வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது எனலாம்.

இதே ஏர்டெல் நிறுவனம் பல காலம் இருந்து வந்தாலும், ஜியோவின் வருகைக்கு பின்னர் சற்று பின்னடைவை சந்தித்து வந்தாலும், தற்போது ஜியோவுக்கு இணையாக சேவைகளை வழங்கி வருகின்றது.

PREPAID PLANS

PREPAID PLANS

இந்த இரு நிறுவனங்களுமே தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல ப்ரீபெய்ட் திட்டத்துடன் ஓடிடி நன்மைகளையும் வழங்கி வருகின்றன. ஆனால் டிஸ்னி மற்றும் ஹாட்ஸ்டார் சேவைகள் சில திட்டங்கள் மூலம் மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது, இந்த நிலையில் இந்த இரு நிறுவனங்களுமே டிஸ்னி மற்றும் ஹாட்ஸ்டார் சேவைகள் ஒரு வருடத்திற்கு வழங்கும் சில திட்டங்களை வழங்கி வருகின்றன. அதனை பற்றித் தான் பார்க்கப் போகிறோம்.

ஏர்டெல் திட்டங்கள்

ஏர்டெல் திட்டங்கள்

ஏர்டெல் தற்போது இரண்டு புதிய ப்ரீபெய்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு டிஸ்னி மற்றும் ஹாட்ஸ்டார் ஒரு வருடத்திற்கான இலவச சந்தா வழங்கப்படுகிறது. ஏர்டெல் தற்போது 448 ரூபாய், 499 ரூபாய், 599 ரூபாய் மற்றும் 2,698 ரூபாய்க்கான ப்ரீபெய்டு திட்டங்களை அறிவித்துள்ளது. இதே சலுகைகளுக்கான திட்டம் 401 ரூபாய்க்கு வழங்கியுள்ளது. இந்த திட்டத்தில் ஒரு வருட டிஸ்னி +ஹாட்ஸ்டார், இதனுடன் 30 ஜிபி டேட்டா உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

ரூ.448 ப்ரீபெய்ட் திட்டம்

ரூ.448 ப்ரீபெய்ட் திட்டம்

.448 ரூபாய்க்கான ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 3 ஜிபி டேட்டாவுடன், அன்லிமிடெட் கால்ஸ் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதனுடன் விஐபி டிஸ்னி +ஹாட்ஸ்டார் சந்தாவுடன், தினசரி 100 எஸ் எம் எஸ்களும் வழங்கப்படுகிறது.

 ரூ.449 ப்ரீபெய்டு திட்டம்

ரூ.449 ப்ரீபெய்டு திட்டம்

டிஸ்னி +ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவுடன் வழங்கப்படுகிறது. இது குறிப்பாக முதல் முறையாக ஏர்டெல்லை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களாக அறிமுகப்படுத்தப்பட்டது. அவர்களுக்கென சிறந்த திட்டமாக இது இருந்து வருகிறது.

ரூ.599 ப்ரீபெய்டு திட்டம்

ரூ.599 ப்ரீபெய்டு திட்டம்

599 ரூபாய்க்கான ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 2 ஜிபி டேட்டாவுடன், அன்லிமிடெட் கால்ஸ் 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதனுடன் டிஸ்னி +ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவுடன், தினசரி 100 எஸ் எம் எஸ்களும் வழங்கப்படுகிறது.

ரூ.2,698 ப்ரீபெய்டு திட்டம்

ரூ.2,698 ப்ரீபெய்டு திட்டம்

இது ஏர்டெல்லில் அறிவிக்கப்பட்ட முக்கிய சலுகையாகும். இது 365 நாட்களுக்கு வேலிட்டியை வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் தினசரி 2 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் வழங்கப்படுகிறது. இதோடு தினசரி 100 இலவச எஸ் எம் எஸ்களும் வழங்கப்படுகிறது. இதனுடன் டிஸ்னி +ஹாட்ஸ்டார் விஐபி+என பலவும் இந்த திட்டங்கள் மூலம் வழங்கப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ

ஏர்டெல் சலுகை போலவே ரிலையன்ஸ் ஜியோவும் சலுகைகளை வாரி வழங்கி வருகின்றது. இது 401 ரூபாய்க்கு 28 நாட்கள் வேலிடிட்டியுடன், 90 ஜிபி டேட்டாவினை வழங்குகிறது. இது தினசரி 3 ஜிபி டேட்டாவினை வழங்குகின்றது. இது ஜியோ - ஜியோ அன்லிமிடெட் கால்களையும், 1000 நிமிடங்கள் ஜியோ - மற்ற நெட்வொர்க்குகளுக்கும் வழங்குகிறது. இதோடு தினசரி 100 எஸ் எம் எஸ்களையும், இதனுடன் ஒரு வருடத்திற்கான டிஸ்னி +ஹாட்ஸ்டார் திட்டமும், இதனுடன் ஜியோ ஆப்பினையும் வழங்குகின்றது.

ஜியோ ஒரு வருட திட்டம்

ஜியோ ஒரு வருட திட்டம்

இதே மற்றொரு திட்டத்தில் 1 வருடத்திற்கு டிஸ்னி +ஹாட்ஸ்டார் திட்டத்தினை வழங்கி வருகிறது. இது 2,599 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்வதன் மூலம்., 365 நாட்கள் வேலிடிட்டியை பெறலாம். அதோடு 740 ஜிபி டேட்டாவையும் பெற்றுக் கொள்ளலாம். இது ஒட்டொமொத்தமாக 10 ஜிபி டேட்டாவினையும், தினசரி 2 ஜிபி டேட்டாவினையும் வழங்கி வருகின்றது. டிஸ்னி +ஹாட்ஸ்டார் சந்தாவுடன், 1,208,1,206,1004,612 ரூபாய்க்கான திட்டங்களையும் வழங்கி வருகின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+