இந்தியாவில் டாப் 3 தனியார் டெலிகாம் நிறுவனங்களும் கட்டணத்தைத் தாறுமாறாக அதிகரித்த காரணத்தால் மக்கள் தற்போது அரசு டெலிகாம் சேவை நிறுவனமான பிஎஸ்என்எல் சேவைக்குச் செல்ல வேண்டும் என்ற வகையில் சமுக வலைத்தளத்தில் மீம் பறந்து வருகிறது.
இந்தக் கட்டண உயர்வால் ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய இரு நிறுவனத்திற்கு மட்டும் வருடம் சுமார் 1 பில்லியன் டாலர் அதாவது 7500 கோடி ரூபாய் அளவிலான பணவரவு உருவாகும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
தி நெருக்கடி, கடன் சுமை
இந்திய டெலிகாம் நிறுவனங்கள் அதிகப்படியான நிதி நெருக்கடியிலும், கடன் சுமையிலும் இருக்கும் காரணத்தால் கட்டணத்தை உயர்த்தியாக வேண்டும் என இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. இதேவேளையில் டெலிகாம் நிறுவனங்களைக் காப்பாற்ற 4 வருடம் மோரோட்டோரியம் சேவையும் மத்திய அரசு வழங்கியது.
கட்டண உயர்வு
இந்தச் சூழ்நிலையில் கட்டணத்தை உயர்த்தினால் வாடிக்கையாளர்களை இழக்க கூடும் என்பதை உணர்ந்தும் வேறு வழி இல்லாமல் கட்டணத்தை உயர்த்தும் முடிவை வோடபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ என அடுத்தடுத்து உயர்த்தியது.
பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ
தற்போது பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ள கட்டண உயர்வு மூலம் ஒரு வாடிக்கையாளரின் சராசரி வருமானம் 25 மற்றும் 20 ரூபாய் வரையில் தத்தம் உயரும். செப்டம்பர் காலாண்டில் ஒரு வாடிக்கையாளருக்கு ஏர்டெல் 153 ரூபாயும், ஜியோ 144 ரூபாயும் பெற்று வந்த நிலையில் மார்ச் 2022க்குள் 25 ரூபாய் மற்றும் 20 ரூபாய் வரையில் உயரும்.
வோடபோன் ஐடியா
ஏர்டெல் மற்றும் ஜியோ சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்யும் நிலையில் வோடபோன் ஐடியா 5 ரூபாய் மட்டுமே அதிகரித்து 114 ரூபாய் வரையில் மார்ச் 2022 வரையில் உயரும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
மும்பை பங்குச்சந்தை
இன்றைய வர்த்தக முடிவில் பார்தி ஏர்டெல் நிறுவனம் 0.31 சதவீதம் வரையில் அதிகரித்து 739.70 ரூபாய்க்கும், வோடபோன் ஐடியா பங்குகள் 3.13 சதவீதம் அதிகரித்து 11.20 ரூபாய்க்கும், ரிலையன்ஸ் ஜியோ வைத்திருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் விலை உயர்வு மற்றும் BT நிறுவன பங்குகளைக் கைப்பற்றும் திட்டம் ஆகியவற்றின் மூலம் 1.26 சதவீதம் அதிகரித்து 2,442.50 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications