ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்..!! டேட்டா இல்லாத 3 புதிய ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகம்..!!

இந்தியாவின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI-ன் புதிய விதிமுறைகளை தொடர்ந்து, முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல், முதன்முறையாக மொபைல் டேட்டா இல்லாத, முற்றிலும் வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளுக்கான மூன்று புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் இணைய பயன்பாடு, ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்து விட்டாலும் இன்னமும் பட்டன் போன்கள் மற்றும் டேட்டா பயன்படுத்தவர்களும் இருக்கின்றனர். ஆனால் டேட்டாவை பெரிதும் பயன்படுத்தாதவர்கள், அதிக விலை கொடுத்து டேட்டாவுடன் கூடிய ரீசார்ஜ் பிளான்களை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். இது குறித்து நுகர்வோர்களிடம் இருந்து வந்த தொடர் கோரிக்கைகளை ஏற்று, TRAI கடந்த செப்டம்பர் மாதம் டெலிகாம் கன்ஸ்யூமர்ஸ் ப்ரொடெக்‌ஷன் (பதின்மூன்றாவது திருத்தம்) ஒழுங்குமுறைகள், 2026 என்ற புதிய விதியை வெளியிட்டது.

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்..!! டேட்டா இல்லாத 3 புதிய ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகம்..!!

இந்த புதிய விதியின்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் டேட்டா இல்லாத, பிரத்யேக வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் பிளான்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும். மேலும், இந்த திட்டங்கள் அக்டோபர் 21-ஆம் தேதிக்குள் அமலுக்கு வர வேண்டும் என்றும் கெடு விதித்திருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில்தான் ஏர்டெல் நிறுவனம் தற்போது இந்த புதிய பிளான்களை களமிறக்கியுள்ளது.

Also Read

ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த மூன்று புதிய திட்டங்களும் 185, 203 மற்றும் 206 ரூபாய் ஆகிய விலைகளில் கிடைக்கின்றன. இந்த பிளான்கள் அனைத்தும் ஏர்டெல் செயலி மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வாடிக்கையாளர்களின் பயன்பாட்டிற்காக பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த திட்டங்களில் மொபைல் டேட்டா எதுவும் வழங்கப்படவில்லை. லோக்கல் , எஸ்டிடி மற்றும் ரோமிங் ஆகியவற்றுக்கான அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் வழங்கப்படுகின்றன. மூன்று திட்டங்களிலும் 300 எஸ்எம்எஸ் இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்த மூன்று திட்டங்களிலும் Free HelloTunes வசதியும் உள்ளது. இதன்கீழ் சந்தாதாரர்கள் கூடுதல் கட்டணமின்றி ஒவ்வொரு 30 நாட்களுக்கு ஒருமுறை ஒரு காலர் ட்யூனை இலவசமாக மாற்றி கொள்ளலாம்.

ரூ.185 பிளான்: 28 நாட்கள், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்கள் மற்றும் 300 எஸ்எம்எஸ்.

ரூ.203 பிளான்: 30 நாட்கள், ரூ.185 விலையை விட கூடுதலாக ரூ.18 செலுத்துவதன் மூலம், கூடுதலாக 2 நாட்கள் செல்லுபடியாகும் காலத்தை பெறலாம். இதில் அன்லிமிடெட் கால்கள் மற்றும் 300 எஸ்எம்எஸ் கிடைக்கும்.

ரூ.206 பிளான் : ஒரு மாதம் , அன்லிமிடெட் கால்கள் மற்றும் 300 எஸ்எம்எஸ் உடன் இலவச ஹலோ டியூன்ஸும் உண்டு

Recommended For You

இன்டர்நெட் தேவையில்லாமல் சாதாரண போன்களை பயன்படுத்தும் லட்சக்கணக்கான முதியவர்கள் மற்றும் கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டங்கள் வரப்பிரசாதமாக இருக்கும். தேவையற்ற டேட்டாவிற்காக கூடுதல் பணத்தைச் செலவழிக்க விரும்பாத குறைந்த பயன்பாடு உள்ள வாடிக்கையாளர்கள் இனி வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் சேவைக்கு மட்டும் குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

ஏர்டெல் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ள நிலையில், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா போன்ற பிற முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களும் விரைவில் இதுபோன்ற வாய்ஸ்-ஒன்லி பிளான்களை அறிமுகப்படுத்தக்கூடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+