சமீபகாலமாக நாட்டின் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்கள் அதிகரித்து வருகின்றன. ஸ்பேம் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் சில நிமிடங்களில் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். இந்த சூழ்நிலையில், ஸ்பேம் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்களுக்கு தடை விதிக்கும் வகையில், பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏர்டெல் நெட்வோர்க் ஆனது, இந்தியாவின் முதல் நெட்வொர்க் அடிப்படையிலான, AI- இயங்கும் ஸ்பேம் கண்டறிதல் தீர்வை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த சேவையின் மூலம், பயனர்கள் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்களைத் தவிர்க்கலாம். இந்த தீர்வு பயனர்களுக்கு ஸ்பேம் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் பற்றிய நிகழ்நேர தகவல்களை வழங்கும் என்று நிறுவனம் கூறுகிறது.

இந்த சேவைக்கு ஏதேனும் கட்டணம் விதிக்கப்படுமா?
இந்த AI-இயங்கும் ஸ்பேம் கண்டறிதல் தீர்வு அனைத்து ஏர்டெல் பயனர்களுக்கும் முற்றிலும் இலவசம். இந்த சேவையை ஏர்டெல்லின் அனைத்து ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு பயனரும் பயன்படுத்தலாம். இது தவிர, பயனர்கள் தங்கள் தொலைபேசிகளில் இந்த சேவையை செயல்படுத்த எதுவும் செய்ய வேண்டியதில்லை. ஏர்டெல் பயனரின் தொலைபேசியில் இந்த சேவை தானாகவே செயல்படுத்தப்படும். இந்த சேவை ஸ்மார்ட்போன் வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என ஏர்டெல் நிறுவனம் கூறியுள்ளது.
இதுகுறித்து ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான கோபால் விட்டல் கூறும்போது, ஸ்பேம் என்பது வாடிக்கையாளர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. கடந்த 12 மாதங்களாக இந்தப் பிரச்சனையை அகற்ற நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இரண்டு அடுக்கு பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்ட இந்த ஏஐ தீர்வு ஆனது இரண்டு அடுக்கு கால் ஃபில்டர்களை கொண்டுள்ளதாக கூறியுள்ளார். ஒரு ஃபில்டர் ஆனது நெட்வொர்க் அளவிலும் மற்றொன்று IT ரிமோட் லேயரிலும் வேலை செய்யும் என கூறியுள்ளார். அனைத்து அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்கள் இந்த இரட்டை அடுக்கு பாதுகாப்பு அமைப்பு வழியாகவே செல்லும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஏர்டெல்லின் இந்த அமைப்பு தினமும் 1.5 பில்லியன் எஸ்எம்எஸ் மற்றும் 2.5 பில்லியன் அழைப்புகளை வெறும் 2 மில்லி விநாடிகளில் செயல்படுத்துகிறது. இந்த தொழில்நுட்பத்தை ஏர்டெல் நிறுவனம் 400 ஏர்டெல் டேட்டா விஞ்ஞானிகளின் உதவியுடன் உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications