ஏர்டெல்லின் சூப்பர் ஆஃபர்.. அனைத்து பிராண்ட்பேன்ட் வாடிக்கையாளர்களுக்கும் அன்லிமிடெட் டேட்டா.. !

ஏர்டெல் நிறுவனம் அனைத்து பிராட்பேண்ட் திட்டங்களிலும் வரம்பற்ற தரவை வழங்கும் எர்டெல் எக்ஸ்ட்ரீம் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஜியோ பைபர் திட்டத்தினை அறிமுகப்படுத்திய பிறகு, ஏர்டெல் இப்படி ஒரு அதிரடியான திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.

நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு, ஜியோவின் போட்டியினை சமாளிக்கும் விதமாக அட்டகாசமான திட்டங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

அன்லிமிடெட் டேட்டா

அன்லிமிடெட் டேட்டா

ஏர்டெல் நிறுவனம் தற்போதுள்ள அனைத்து பிராட்பேண்ட் திட்டங்களையும், வரம்பற்ற டேட்டா திட்டங்களுக்கு மாற்றத் தொடங்கியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ பிராட்பேண்ட் நிறுவனம் நிபந்தனையற்ற 30 நாள் இலவச டேட்டாக்களையும், வரம்பற்ற கால்களையும் அறிவித்த பின்னர், இந்த அதிரடியான நடவடிக்கை வருகிறது.

எவ்வளவு டேட்டா?

எவ்வளவு டேட்டா?

உண்மையில் ஏர்டெல் பிராட்பேண்ட் பயனர்கள், தங்கள் பிராட்பேண்ட் இணைப்புகளை மேம்படுத்த விரும்பினால் இது சரியான நேரம். பேசிக், எண்டர்டெயின்மென்ட், பிரீமியம் மற்றும் VIP போன்ற ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டங்கள் அனைத்தும் வரம்பற்ற தரவு திட்டங்களை வழங்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளன, அவை உண்மையில் கிட்டத்தட்ட 3300 ஜிபி வரையில் இருக்கலாம். எனினும் இந்த திட்டமானது ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

ஜியோ பைபருக்கு மாறுவதை தடுக்க திட்டம்

ஜியோ பைபருக்கு மாறுவதை தடுக்க திட்டம்

ஓன்லிடெக் அறிக்கையின் படி, அனைத்து பிராண்ட்பேன்ட் திட்ட சந்தாதாரர்களுக்கும் மாற்றும் பணியினை ஏர்டெல் செய்து வருகிறது. மேலும் தனது வலைத்தளத்திலிருந்து ஏர்டெல் 299 ரூபாய் திட்டத்தினையும் அகற்றியுள்ளது. ஏர்டெல்லில் இந்த திட்டமானது, தங்களது வாடிக்கையாளர்கள் ஜியோ ஃபைபர் இணைப்புக்கு மாறுவதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

 பல நன்மைகளை நீக்கியுள்ளது

பல நன்மைகளை நீக்கியுள்ளது

இதோடு ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் பிராட்பேண்ட் திட்ட பயனர்களுடன் வந்த, பிரைம் வீடியோ சந்தாவையும் நிறுவனம் தனித் தனியாக நீக்கியுள்ளது. அதோடு ஏர்டெல் தேங்க்ஸ் பிளாட்டினம் வாடிக்கையாளர்களுக்கான ZEE5 நன்மைகளையும் ஏர்டெல் நீக்கியுள்ளது.

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம்

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம்

ஏர்டெல் தனது ஏர்டெல் டிவி இயங்குதளத்தை ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் என்று மறுபெயரிடுவதன் ஒரு பகுதியாக இந்தியாவில் தனது எக்ஸ்ட்ரீம் பாக்ஸ் மற்றும் எக்ஸ்ட்ரீம் ஸ்டிக்கை திங்களன்று அறிமுகம் செய்தது. ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் 4கே ஹைப்ரிட் பாக்ஸ் என்றும் அழைக்கப்படும் இந்த ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பாக்ஸ் ஆனது இந்தியாவில் ரூ.3,999-க்கு வாங்க கிடைக்கும். தற்போதுள்ள ஏர்டெல் டிஜிட்டல் டிவி வாடிக்கையாளர்கள், இதனை தள்ளுபடி விலையில் ரூ.2,249-க்கு பெறுவார்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+