இந்தியாவின் 2வது பெரிய டெலிகாம் சேவை நிறுவனமான ஏர்டெல் தனது டெலிகாம் சேவைக்கான கட்டண உயர்வை செயல்படுத்த சரியான நேரத்திற்காக காத்திருப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் டிஜிட்டல் வர்த்தகத்தின் வேகம் டெலிகாம் சேவை கட்டணத்தில் அடங்கியுள்ளது எல்லோருக்கும் தெரியும், இந்தியாவில் மலிவான விலையில் மொபைல் இண்டர்நெட் கொடுப்பதே நாட்டின் டிஜிட்டல் சேவை பயன்பாட்டை அதிகரித்துள்ளதற்கு முக்கியமான காரணமாகும்.

இந்த நிலையில் வோடபோன் ஐடியா தனது கடனை தீர்க்க போராடி வரும் வேளையில், ஏர்டெல் கட்டண உயர்வு காத்திருக்கிறது. பார்த் ஏர்டெல் நிர்வாகம் கடந்த 2 வருடத்தில் 2 முறை தனது சேவைகளின் கட்டணத்தை மறுசீரமைப்பு செய்த நிலையில் 3வது கட்டண மாற்றத்திற்கான சரியான நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
தொலைத்தொடர்புத் துறை முழுவதும் கட்டண சீரமைப்பு அவசியம் என்றும், அனைத்து டெலிகாம் ஆப்ரேட்டர்களின் பங்களிப்பும் இதில் தேவை என்றும் மே 15ம் தேதி நடைபெற்ற 4ம் காலாண்டு முடிவுகள் வெளியிடும் கூட்டத்தில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கோபால் விட்டல் கூறினார்.
"வருவாய் அதிகரிக்கவும், அதேவேளையில் வாடிக்கையாளர்களை இழக்காமல் எங்களால் முடிந்தவற்றைச் செய்துள்ளோம். பியூச்சர் போன்களை பயன்படுத்துவோருக்கான திட்டத்தின் அடிப்படை கட்டணங்களை உயர்த்தியுள்ளோம். சராசரி வருவாய் (ARPU) அதிகரிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம்... ஆனால் இறுதியில், இது ஒரு போட்டி சார்ந்த சந்தை.
டெலிகாம் துறை முழுவதும் கட்டண சீரமைப்பு செய்ய வேண்டியது அவசிம், நாங்கள் மட்டும் இதைச் செய்வது, நாங்களே எப்போதும் முன்னெடுப்பது சாத்தியம் தான். ஆனால் போட்டியாளர்கள் பின்பற்றாவிட்டால், அது எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதுவே சவால்" என்று அவர் மேலும் கூறினார்.
தற்போது எங்கள் வாடிக்கையாளரின் சராசரி வருவாய் ரூ.200 ஐக் கடந்துள்ளது. சரியான சராசரி வருவாய் அளவு ரூ.300 ஆக இருந்தாலும், உலகிலேயே மிகக் குறைவான ஒன்றாகவே இருக்கும் என்று பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கோபால் விட்டல் கூறினார்.
இது அனைத்தும் முதலீட்டாளர் நலனில் இருந்து கோபால் விட்டல் பேசினாலும், வாடிக்கையாளர் தரப்பில் இதை பார்க்கும் போது, இன்னொரு முறை கட்டணத்தை உயர்த்தினால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.


Click it and Unblock the Notifications