இந்திய டெலிகாம் சந்தையில் நாளுக்கு நாள் போட்டி அதிகரித்து வரும் வேளையில் வாடிக்கையாளர்களை ஈர்க்க விதவிதமான சலுகைகள் உடன் புதுப் புதுத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக 5ஜி சேவையில் அதிகப்படியான வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும் என்ற போட்டி ஜியோ மற்றும் ஏர்டெல் மத்தியில் கடுமையாக உள்ளது
இந்த நிலையில் ஏர்டெல் நிறுவனம் தற்போது இலவசமாக நெட்பிளிக்ஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா எனப் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டம் வேலை காரணமாகவோ அல்லது பொழுதுபோக்கிற்காக அதிகமாக இண்டர்நெட் டேட்டா-வை பயன்படுத்துவோருக்காக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

ஏர்டெல் நிறுவனம் 1499 ரூபாயில் புதிய திட்டத்தைத் தனது சேவையின் கீழ் அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் ஒரு ஏர்டெல் வாடிக்கையாளருக்கு என்ன கிடைக்கும்..? என்ன பலன்..? ஆகியவற்றைத் தெரிந்துகொண்டு தற்போது நீங்கள் பயன்படுத்தும் திட்டத்திற்கும் புதிய திட்டத்திற்கு என்ன வித்தியாசம் என்பதைக் கணக்கிட்டுத் தேர்வு செய்யுங்கள்.
1499 ரூபாய் மதிப்பிலான ரீசார்ஜ் திட்டத்தின் கீழ் ஒரு ஏர்டெல் வாடிக்கையாளருக்கு 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 3 ஜிபி டேட்டா என 84 நாட்களுக்கு இந்தத் திட்டம் செல்லுபடியாகும். இதோடு சில முக்கியமான இணை சேவைகளும் உள்ளது.
1499 ரூபாய் திட்டத்தில் டேட்டா, வாய்ஸ் கால் தாண்டி நெட்பிளிக்ஸ் பேசிங் சப்ஸ்கிரிப்ஷன், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, அப்போலோ 24x7 சர்கிள் மெம்பர்ஷிப், இலவசமாக ஹலோ டியூன்ஸ், விங்க் மியூசிக் ஆகியவை அளிக்கப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தில் முக்கிய அம்சமே நெட்பிளிக்ஸ் பேசிங் சப்ஸ்கிரிப்ஷன் தான் இத்திட்டத்தைத் தனியாக வாங்கினால் 199 ரூபாய் செலுத்த வேண்டும், 3 மாதத்திற்கு இதுவே 600 ரூபாய்ச் செலவாகும் வேளையில். இதோடு 5ஜி போன் வைத்திருந்தால் அன்லிடெட் ஆக 5ஜி சேவையைப் பயன்படுத்த முடியும்.


Click it and Unblock the Notifications