இந்தியாவின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனமான ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக 6 ஜிபி இண்டர்நெட் டேட்டா வரை ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு அளிக்கத் துவங்கியுள்ளது.
பொதுவாகப் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு அதிகளவிலான சலுகைகளை அளிக்கும் டெலிகாம் நிறுவனங்கள் சமீபகாலமாக வர்த்தகப் போட்டியின் காரணமாக ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
இதன் மூலம் ஏர்டெல் நிறுவனத்தின் ப்ரிபெய்டு வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட தொகை கொண்ட ரீசார்ஜ்-ஐ செய்தால் கூப்பன் வடிவில் சுமார் 6 ஜிபி வரையிலான இலவச இண்டர்நெட் டேட்டாவை வழங்குவதாக டெலிகாம்டாக் தெரிவித்துள்ளது.
ஏர்டெல் நிறுவனத்தில் 500 ரூபாய்க்குக் குறைவான ப்ரீபெய்டு திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் போது கூப்பன் வடிவில் ஒரு ஜிபி இண்டர்நெட் டேட்டா கொண்டு 2 கூப்பன்களை வழங்குவதாக டெலிகாம்டாக் குறிப்பிட்டு உள்ளது.
இதன் மூலம் ரூ.219, ரூ.249, ரூ.279, ரூ.289, ரூ.298, ரூ.349, ரூ.398 அல்லது ரூ.448 திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் போது 1 ஜிபி டேட்டா கொண்ட 2 கூப்பன்களை வாடிக்கையாளர்கள் பெறுவார்கள், இதற்கு 28 நாள் கால வரையறை உள்ளது.
இதேபோல் ரூ.399, ரூ.449, ரூ.558 மற்றும் ரூ.599 திட்டங்களுக்கு 56 நாள் கால அவகாசம் கொண்ட 4 கூப்பன்களும், ரூ.598 அல்லது ரூ.698 திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் போது 84 நாட்கள் கால அவகாசம் கொண்ட 1 ஜிபி டோட்டா உடைய 6 கூப்பன்கள் அளிக்கப்படுகிறது.
மேலும் இந்தக் கூப்பன்கள் அனைத்தும் ஏர்டெல் டேங்க்ஸ் ஆப்-ல் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே கிடைக்கும், இந்தக் கூப்பன்கள் மை கூப்பன்ஸ் பிரிவில் சேமிக்கப்பட்டு இருக்கும், இதைக் குறிப்பிட்ட காலத்திற்குள் ரீடீம் செய்துகொள்ள வேண்டும்.