இன்றைய நவீன உலகில் இண்டர்நெட் சேவையில் உச்சக்கட்ட தொழில்நுட்பம் எனில் அது செயற்கைகோள் வாயிலாக நேரடியாக அதிவேக இண்டர்நெட் சேவையை எவ்விதமான கூடுதல் கனெக்ஷன் இல்லாமல் பெறும் தொழில்நுட்பம் தான்.
இது பிராட்பேன்ட் சேவையில் பெரும் புரட்சியாக பார்க்கப்படுவது மட்டும் அல்லாமல் உலகளவில் ஒரே நிறுவனத்தால் சிறப்பான டெலிகாம் சேவை அளிக்க முடியும் அளவுக்கு வர்த்தக ரீதியில் திறன் கொண்டு உள்ளது.

இந்த புரட்சி கரமான தொழில்நுட்பத்தை உருவாக்கியது எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் கிளை நிறுவனமாக இயங்கி வரும் Starlink பிரிவு விண்ணில் செயற்கைகோள் நிறுத்தி பூமியில் டெலிகாம் சேவை அளிக்க முடியாத இடத்தில் கூட அதிகவேக இண்டர்நெட் சேவைகளை வழங்கி வருகிறது Starlink.
கிட்டத்தட்ட இதே சேவையை இந்தியாவின் பார்தி ஏர்டெல் லண்டனை சேர்ந்த Airbus OneWeb Satellites உடன் இணைந்து OneWeb என்ற பெயரில் உருவாக்கியது.
OneWeb வெளிநாட்டு நிறுவனமாக இருந்தாலும் சுமார் 30 சதவீத பங்குகளை பார்தி ஏர்டெல் வைத்துள்ளது, OneWeb-ன் செயற்கைகோள் பிராட்பேன்ட் சேவை இந்தியாவில் வருகிற செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் இந்தியாவிலும் இனி வீட்டில் இருந்த படியே குறிப்பாக காடு, மலை பகுதியில் இருந்தாலும் ஒரு சிறிய டிஷ் ஏன்டனா மூலம் அதிவேக இண்டர்நெட் சேவையை இந்திய மக்கள் பெற முடியும். இதை இந்தியாவில் ஏர்டெல் அறிமுகம் செய்ய உள்ளதால் பெரிய அளவிலான வர்த்தக வாய்ப்பை ஏர்டெல் பெற்றுள்ளது.
அமெரிக்காவில் மட்டும் இருந்த இந்த சேவை தற்போது இந்தியாவிலும் வரப்போகிறது, இதுவும் இந்திய நிறுவனத்தின் முதலீடுகளால் அறிமுகம் செய்யப்பட உள்ளது. OneWeb வெளியிட்டு உள்ள அறிவிப்பில் மத்திய டெலிகாம் துறை இந்தியாவில் முதல் கட்டமாக 2 satellite gateway அமைத்துக்கொள்ள அனுமதி அளித்துள்ளது. இதில் ஒன்று குஜராத் மாநிலத்தின் Mehsana மற்றும் சென்னை-க்கு அருகிலும் அமைக்கப்பட உள்ளது.

இந்த satellite gateway தான் இந்தியாவில் செயற்கைகோள் வாயிலாக பிராட்பேன்ட் சேவை அளிக்க அடிப்படையாக இருக்கும், இதை அமைக்க அரசு தரப்பில் OneWeb நிறுவனத்திற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. OneWeb ஏவும் செயற்கைகோள்கள் Ka ஸ்பெக்ட்ரம் பேன்ட் (27.5 to 29.1 GHz and 29.5 to 30 GHz) மற்றும் Ku ஸ்பெக்ட்ரம் பேன்ட் (14 GHz) இணைப்பில் இயங்குகிறது. இந்த குறிப்பிட்ட ஸ்பெக்ட்ரம் பேன்ட் ஒதுக்கப்பட்ட உடன் இந்தியாவில் சேவை துவங்கப்படும்.
செயற்கைகோள் வாயிலாக பிராட்பேன்ட் சேவை பிரிவில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடாபோன் ஆகியவை இல்லாதது பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications