சென்னை: இந்தியாவின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனமான ஏர்டெல்-ன் தாய் நிறுவனமான பார்தி எண்டர்பிரைசஸ், பிரிட்டன் நாட்டின் மிகப்பெரிய பிராட்பேண்ட் மற்றும் டெலிகாம் சேவை நிறுவனமான BT குழுமத்தில் 24.5% பங்கை வாங்க உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை பார்தி எண்டர்பிரைசஸ் வெளியிட்டுள்ளது.
பிரிட்டிஷ் டெலிகம்யூனிகேஷன் எனப்படும் BT குரூப்-ல் அதிக பங்குகள் வைத்திருக்கும் அல்டிஸ் யுகே என்னும் நிறுவனத்திடம் இருந்து பார்தி எண்டர்பிரைசஸ் இந்த பங்குகளை வாங்க உள்ளது. பார்தி எண்டர்பிரைசஸின் சர்வதேச முதலீட்டு பிரிவான பார்தி குளோபல் மூலமாக இந்த முதலீடு செய்யப்பட உள்ளது.

இந்தியாவில் ஜியோ உடன் நேருக்கு நேர் போட்டிப்போட்டு வரும் ஏர்டெல் சமீபத்தில் தனது ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை வர்த்தகத்தில் மிகப்பெரிய அளவிலான மறுசீரமைப்பு செய்து நேரடி வர்த்தகத்தில் இருந்து வெளியேறியது. இதை தொடர்ந்து ஏர்டெல்-க்கு கூடுதல் வருவாய் ஈட்டவும், வருமானம் ஈட்டவும் புதிய சந்தை கட்டாயம் அவசியமாகும்.
இதை பூர்த்தி செய்யவே தற்போது ஏர்டெல்லின் தாய் நிறுவனமான பார்தி எண்டர்பிரைசஸ் தற்போது BT குரூப்-ல் 24.5 சதவீதம் அளவிலான பங்குகளை வாங்க உள்ளது.
பார்தி எண்டர்பிரைசஸ் தலைவர் சுனில் பார்தி மிட்டல் இதுக்குறித்து கூறுகையில் "BT குரூப் மற்றும் இங்கிலாந்து மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. BT குரூப்-யிடம் சிறந்த பிராண்டுகள், உயர்தர சொத்துக்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த நிர்வாக குழு உள்ளது. BT குரூப்-ன் நீண்ட கால மதிப்பை உருவாக்கும் திட்டத்தையும், உத்திக்கும் நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
பார்தி எண்டர்பிரைசஸ்-ன் வெளிநாட்டு பிரிவான பார்தி குளோபல் டெலிகாம், டெக்னாலஜி, டிஜிட்டல் இன்பரா, ஸ்பேஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகியவற்றில் வர்த்தகத்தையும், சொத்துக்களையும் வளர்க்கும் பணியில் ஈடுப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக 2023 ஆம் ஆண்டில் யூடெல்சாட்டுடன் இணைந்த ஸ்பேஸ் கம்யூனிகேஷன் நிறுவனமான ஒன்வெப்பில் பார்தி குளோபல் முதலீடு செய்துள்ளது.
தொலைத்தொடர்புத் துறைத் தொழிலதிபர் பேட்ரிக் திராஹிக்கு சொந்தமான நிறுவனம் தான் இந்த அல்டிஸ் யு கே. அதிக கடன் பிரச்சனையால் அவர் BT குழுமத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். தற்போது இந்த பங்குகளை பார்தி குளோபல் வாங்குகிறது.
பார்தி குளோபல் நிறுவனத்தின் துணை நிறுவனமான பார்தி டெலவென்ச்சர்ஸ் மூலம் 9.99 சதவிகித பங்குகள் உடனடியாக வாங்கப்படும். மீதமுள்ள 14.51 சதவிகித பங்குகள் தேவையான ஒப்புதல்கள் பெற்ற பின்னர் வாங்கப்படும். இந்த முதலீட்டிற்கு பிரிட்டன் தேசிய பாதுகாப்பு மற்றும் முதலீட்டு சட்டத்தின் ஒப்புதல் தேவைப்படும் என்றும் பார்தி எண்டர்பிரைசஸ் தெரிவித்துள்ளது. இந்த முதலீட்டின் மூலம் BT குழுமத்தில் பார்தி எண்டர்பிரைசஸ் முக்கிய பங்குதாரராக மாற உள்ளது.
More From GoodReturns

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!



Click it and Unblock the Notifications