ஏர்டெல் பேமெண்ட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ். ஏர்டெல் அதன் வாடிக்கையாளர்களுக்கு சேமிப்பு கணக்கில் 1 லட்சத்திற்கும் மேல் டெபாசிட் செய்தால், வருடத்திற்கு 6% வட்டி விகிதம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
ஏர்டெல்லின் இந்த நடவடிக்கையானது, ரிசர்வ் வங்கி கடந்த மாதத்தில் பேமெண்ட் பேங்குகளின் டெபாசிட் வரம்பினை 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுவதாக அறிவித்த நிலையில் வந்துள்ளது.
இது பேமெண்ட் பேங்குகளின் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது எனலாம். ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் வங்கிகளுக்கு சென்று அலைவதை விட, மிக எளிதாக பேமெண்ட் வங்கிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். அதோடு வங்கிக்கு இணையாக அல்லது அதற்கு மேலாக வட்டி கிடைக்கிறது என்றால், அது மிக நல்ல விஷயம் தானே.
ரூ.1 லட்சத்திற்கு மேல் வட்டி விகிதம்
அந்த வகையில் நாம் இன்று பார்க்கவிருப்பது ஏர்டெல் பேமெண்ட் வங்கியின் சலுகையைத் தான். ஏர்டெல் பேமெண்ட் வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு சேமிப்பு கணக்கில் 1 லட்சத்திற்கும் மேல் டெபாசிட் செய்தால், வருடத்திற்கு 6% வட்டி விகிதம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
ரூ. லட்சத்திற்கு கீழ் எவ்வளவு வட்டி?
இதே ஒரு லட்சத்திற்கும் குறைவான சேமிப்பு டெபாசிட்டுகளுக்கு 2.5% வட்டி விகிதம் எனவும் அறிவித்துள்ளது. எனினும் 1 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்பவர்களுக்கு அதிக வட்டி கொடுப்பதாகவும் அறிவித்துள்ளது அதன் வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது எனலாம். ஏனெனில் இந்த வட்டி விகிதமானது முன்னணி வங்கிகளின் வட்டி விகிதத்தினை விட அதிகமாகும்.
வாடிக்கையாளர்கள் கேட்ட முக்கிய அம்சம்
இது குறித்து ஏர்டெல் பேமெண்ட் வங்கியின் தலைமை செயல் அதிகாரி, அனுப்ரதா பிஸ்வால் கூறுகையில், ரிசர்வ் வங்கியின் சேமிப்பு உச்ச வரம்பு அதிகரிப்பு என்பது, பேமெண்ட் வங்கிகளுக்கு ஒரு முக்கிய அம்சமாகும். ஏனெனில் இது வாடிக்கையாளர்களிடம் இருந்து கேட்கப்பட்டு வந்த முக்கிய அம்சமாகும். இது பேமெண்ட் வாடிக்கையாளர்களுக்கு மிக நல்ல விஷயமே என்று கூறியுள்ளார். ஆக ஏர்டெல்லில் இந்த வட்டி அதிகரிப்பானது, அதன் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் நல்ல விஷயமாக இருக்கும்.
பேமெண்ட் வங்கியின் புதிய திட்டம்
ஏர்டெல் பேமெண்ட் வங்கி தற்போது 5.5 கோடிக்கும் மேற்பட்ட பயனர்களை கொண்டுள்ளது. இதற்கிடையில் தற்போது ஏர்டெல் பேமெண்ட் பேங்கு மற்றொரு புதிய திட்டத்தினையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது Rewards123 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள், கேஷ்பேக் சலுகைகள், ரிவார்டு பாயிண்டுகள், என பல பரிவர்த்தனை சலுகைகள் பலவும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications