தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடந்த 2019ம் ஆண்டு மரண ஆண்டாகவே இருந்தது. ஏனெனில் அந்தளவுக்கு இந்தியாவில் அடுத்தடுத்த பிரச்சனைகளை சந்தித்து வந்த நிலையில் ஏர்டெல் மரண அடி வாங்கியதாகவே கருத்தப்படுகிறது.
ஏனெனில் இந்தியாவில் தான் அடுத்தடுத்த முறை அடி வாங்கிய நிலையில், தற்போது பார்தி ஏர்டெல் நிறுவனம் ஆப்பிரிக்காவிலும் சற்று அடி வாங்கியுள்ளது.
சொல்லப்போனால் கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் அதன் லாபம், வரி செலுத்திய பிறகு 103 மில்லியன் டாலராக குறைந்துள்ளது.
நிகரலாபம் வீழ்ச்சி
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் கடந்த ஜூன் காலாண்டில் அதன் பொதுப் பங்கு வெளியீடு மூலம் 750 மில்லியன் டாலர் நிதியினை திரட்டியது இந்த நிறுவனம். இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் மூன்றாவது காலாண்டில் நிகரலாபம் 21% வீழ்ச்சி கண்டு 103 மில்லியன் டாலர்களாக குறைந்துள்ளதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
வருவாய் எவ்வளவு?
நிகரலாபம் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில் இந்த நிறுவனத்தின் வருவாய் 883 மில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 14.2% அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 750 மில்லியன் டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது ஆப்பிரிக்கா பிராந்தியத்தில் மேம்பட்ட செயல்திறனால் உந்தப்படுகிறது என்றும் ஏர்டெல் தெரிவித்துள்ளது.
போராட இது உதவும்
இது நைஜூரியா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் திடமான முடிவுகளால் ஆதரிக்கப்படுகிறது என்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. பாரதி ஏர்டெல்லின் ஆப்பிரிக்கா பிரிவுக்கு வருவாய் அதிகரிப்பு குறிப்பிடத்தக்க ஒரு விஷயமாகும். இது இந்தியாவில் அதன் போட்டியாளாரான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் நிறுவனத்தை எதிர்த்து போராட உதவும் என்றும் கூறப்படுகிறது.
மோசமான காலம்
இந்தியாவில் பார்தி ஏர்டெல் மற்றும் பிற ஆப்ரேட்டர்கள் ஒரு மோசமான தீர்ப்பிலிருந்து வெளிவரும் ஒரு நேரத்தில், இந்த அறிக்கையானது வெளிவந்துள்ளது. அதிலும் இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய தொகையும் செலுத்தும் கட்டாயத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது. அதிலும் 14 ஆண்டுகால போராட்டத்திற்கு பின்பு உச்சநீதிமன்றம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இது குறித்தான தீர்ப்பினை வழங்கியது.
ஏர்டெல் நிலுவை
இந்த தொலைத் தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய தொகையில் ஏர்டெல், 35,586 கோடி ரூபாய் செலுத்த வேண்டிய நிர்பந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் அதன் டிசம்பர் காலாண்டு முடிவுகள் பிப்ரவரி 4ம் தேதி அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது. போராடும் இந்திய வர்த்தகத்தில் இந்த நிறுவனம் ஆப்பிரிக்காவில் கலங்கரை விளக்காக நிரூபித்துள்ளது.
இந்தியாவில் நஷ்டம்
ஏர்டெல் ஆப்பிரிக்காவின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 107.1 மில்லியன் பேராக உள்ளது. இதில் 32.9 மில்லியன் டேட்டா உபயோகிப்பவர்கள் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் சராசரியாக ஒரு வாடிக்கையாளரின் வருவாய் 2.8 டாலராகும். இந்த நிலையில் இந்தியாவில் இந்த நிறுவனம் செப்டம்பர் காலாண்டில் நஷ்டம் 23,046 கோடி ரூபாயாக கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இது முந்தைய ஆண்டு இதே காலாண்டில் நிகரலாபம் 118 கோடி ரூபாய் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications