சென்னை: உங்கள் ஏர்டெல் திட்டத்தின் டேட்டா தீர்ந்துவிட்டதா? கவலை வேண்டாம்! உங்கள் இணையத் தேவையை பூர்த்தி செய்ய பல்வேறு பூஸ்டர் மற்றும் ஆட்-ஆன் திட்டங்களை ஏர்டெல் வழங்குகிறது. எனவே, உங்கள் பயன்பாட்டைப் பொறுத்து, நீங்கள் பிளான்களைத் தேர்வுசெய்து தொடர்ந்து அதிவேக நெட்ஒர்க்கைப் பெறலாம். இந்தக் கட்டுரையில் பட்ஜெட் விலையில் உள்ள ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்களைப் பற்றி பார்ப்போம்.
ஏர்டெல் பல டேட்டா பூஸ்டர் மற்றும் ஆட்-ஆன் (add-on) ப்ரீபெய்ட் திட்டங்களைக் கொண்டுள்ளது. உங்களுடைய ரீசார்ஜ் திட்டத்துடன் இந்த ஆட்-ஆன் திட்டத்தை இணைத்து ரீசார்ஜ் செய்வதன் மூலம், உங்களுடைய ரீசார்ஜ் காலம் முடிவடைந்தாலும் ஆட்-ஆன் திட்டத்தை உங்களால் தொடர்ந்து பயன்படுத்த முடியும். அன்லிமிடெட் டேட்டாவை கொண்ட லாங் டேர்ம் திட்டங்களும் இதில் உள்ளது. எனவே நீங்கள் பயன்படுத்தும் காலத்தைப் பொறுத்து உங்களுக்கு தேவையான திட்டத்தை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். இதில் கூறிய திட்டங்கள் அனைத்தும் 4G டேட்டாக்கு மட்டுமே பொருந்தும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

ஏர்டெல்லில் உள்ள இந்த ஆட்-ஆன் திட்டங்கள் மலிவானது. இவை ரூ. 10 ரூபாய்க்கும் கீழ் கிடைக்கிறது. ரூ.9க்கு, ஏர்டெல் உங்களுக்கு இந்தத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. உங்களுடைய தினசரி டேட்டா முடிந்தவுடன் அதன் வேகம் 64 Kbps ஆகக் குறையும். எனவே நீங்கள் ரூ.9 ரூபாய் ப்ரீபெய்ட் திட்டத்தை பயன்படுத்துவதன் மூலம் ஒரு மணி நேரத்திற்கு 1 ஜிபி அதிவேக டேட்டா கிடைக்கும். இது வெறும் ஒரு மணி நேரத்திற்கு மட்டுமே என்பதை புரிந்து கொள்ளுங்கள். மற்ற ஆட்-ஆன் திட்டங்கள் குறைந்தபட்சம் ஒரு நாள் செல்லுபடியாகும். அதற்கு ஏற்றார் போல் குறைந்த டேட்டாக்களை அவை பெற்று இருக்கும். 39 ரூபாய் திட்டத்தில் அன்லிமிடெட் டேட்டா ஒரு நாள் முழுவதும் தரப்படுகிறது.
அடுத்து மிகவும் மலிவான திட்டங்களை பற்றி பார்ப்போம். இதில் ரூ.19 திட்டத்திற்கு, 1ஜிபி 1 நாள் கொடுக்கப்படுகிறது. மற்றொன்று ரூ. 29 ரூபாய் திட்டத்தில், ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவுடன் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. ரூ. 49 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் அன்லிமிடெட் டேட்டா, 1 நாள் முழுவதும் கிடைக்கிறது. மேலும் Wynk music ஆப்பின் பிரீமியம் கிடைக்கிறது.
ஏர்டெல் இன்னும் பல டேட்டா ஆட்-ஆன் திட்டங்களைக் கொண்டுள்ளது. ரூ. 65 திட்டத்தின் மூலம் உங்களின் தற்போதைய டேட்டா திட்டத்துடன், 4 ஜிபி அதிவேக டேட்டா கிடைக்கிறது. ரூ. 79 திட்டத்தில் 2 நாட்களுக்கு அன்லிமிடெட் டேட்டா கிடைக்கிறது. ரூ.98 - உங்களின் தற்போதைய டேட்டா திட்டத்துடன் இணைந்து, 5 ஜிபி டேட்டாவை தருகிறது மேலும் Wynk music ஆப்பின் பிரீமியம் இதில் கிடைக்கிறது.
ரூ. 129 திட்டம் உங்களின் தற்போதைய டேட்டா திட்டத்துடன் , 12 ஜிபி டேட்டாவை தருகிறது. ரூ. 148 திட்டம் மூலம் உங்களின் தற்போதைய டேட்டா திட்டத்துடன், இதில் 15 ஜிபி டேட்டா மற்றும் Sony LIV உட்பட 20க்கும் மேற்பட்ட OTT தளங்களை 28 நாட்களுக்கு இலவசமாக பயன்படுத்த முடியும். ரூ. 149 திட்டத்தில் உங்கள் தற்போதைய டேட்டா திட்டத்துடன்,1GB டேட்டாவும், Sony LIV மற்றும் Lionsgate Play உட்பட 20க்கும் மேற்பட்ட OTT தளங்களை 30 நாட்களுக்கு இலவசமாகப் பயன்படுத்த முடியும்.
ரூ. 181 திட்டத்தில், ஒரு நாளுக்கு 1 ஜிபி டேட்டா என்ற கணக்கில் 30 நாட்களுக்கு வழங்கப்படும். ரூ. 301 திட்டத்தின் மூலம் உங்களின் தற்போதைய டேட்டா திட்டத்துடன், 50ஜிபி டேட்டா மற்றும் Wynk Music பிரீமியம் சந்தாவைப் பெற முடியும்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications