சென்னை: இந்தியாவின் 2வது பெரிய டெலிகாம் சேவை நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனம், தனது மியூசிக் ஸ்ட்ரீமிங் சேவையான வின்க் மியூச்ஸ் ஆப்-ஐ மூடவுள்ளது என்று ஏர்டெல் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஆகஸ்ட் 27 அன்று தெரிவித்தார்.
ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் சேவைகளை வழங்க வேண்டும் என்பதற்காக இந்த வின்க் மியூசிக் ஸ்ட்ரீமிங் சேவையை 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. வீன்க் சேவை மூடப்பட்ட நிலையில் இப்பிரிவில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் ஏர்டெல் எகோசிஸ்டத்தில் பிற பணிகளில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த அறிவிப்பு வெளியான அடுத்த சில மணிநேரத்தில் பாரதி ஏர்டெல் ஒரு சூப்பரான ட்விஸ்ட் கொடுத்தது. பார்தி ஏர்டெல், அமெரிக்காவின் ஆப்பிள் இன்க் உடன் கூட்டணி அமைத்து, இந்திய மக்களுக்கு ஆப்பிள் டிவி+ மற்றும் ஆப்பிள் மியூசிக் ஆகிய OTT வீடியோ மற்றும் மியூசிக் ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கு பிரத்தியேக சலுகைகளை வழங்க ஒப்பந்தம் செய்ததாக அறிவித்தது.
"இந்த புதிய கூட்டணி மூலம் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ஆப்பிள் மியூசிக் சேவையை எளிதாக அணுக முடியும். கூடுதலாக, வின்க் ப்ரீமியம் பயனாளர்கள் ஆப்பிள் மியூசிக் மூலம் ஏர்டெலில் இருந்து பிரத்தியேக சலுகைகளைப் பெறுவார்கள்" என்று பாரதி ஏர்டெல் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஆப்பிள் டிவி+ மற்றும் ஆப்பிள் மியூசிக் ஆகிய தனது OTT வீடியோ மற்றும் மியூசிக் ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கு பிரத்தியேக சலுகைகளை வழங்க ஆப்பிளுடன் கூட்டணி அமைத்துள்ளதாக ஏர்டெல் ஆகஸ்ட் 27 அன்று அறிவித்தது.
இந்த கூட்டணி ஏர்டெல் Xstream வாடிக்கையாளர்கள் இனி ப்ரீமியம் ஏர்டெல் WiFi மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன் Apple TV+ இலிருந்து கண்டென்ட்களை பார்க்க முடியும். ஏர்டெல் Xstream ஃபைபர் திட்டம் ஆப்பிள் டிவி+ மற்றும் ஆப்பிள் மியூசிக் உடன் கவர்ச்சிகரமானதாக மாற உள்ளது. இந்த ஆப்பிள் மியூசிக் மற்றும் ஆப்பிள் டிவி+ சலுகைகள் இந்தியாவில் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
இதேவேளையில் பார்தி ஏர்டெல் வின்க் செயலியை மொத்தமாக மூட இச்சேவையை வைத்து உறுதியாக பணமாகும் திட்டம் இல்லாமல் இருப்பது தான் இச்சேவையை மூட முதலும் முக்கியமான காரணமாகும்.


Click it and Unblock the Notifications