இந்தியாவின் இண்டர்நெட் இணைப்பில் ஒரு புதிய அத்தியாயம் இன்று முதல் தொடங்குகிறது என்றால் மிகையில்லை. செயற்கைகோள் வாயிலாக அதிவேக இண்டர்நெட் சேவை அளிக்கும் எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் அமெரிக்கா, கனடா தொடங்கி இந்தியா, சீனாவில் தான் தனது சேவையை கொண்டு வர வேண்டும் என்ற முக்கியமான திட்டத்தை தீட்டிருந்தார்.
இதற்காக அலுவலகம் கூட திறக்கப்பட்டது, புக்கிங் தொகையும் மக்களிடம் வசூலிக்கப்பட்டது, ஆனால் அனுமதி கிடைக்காத காரணத்தால் மொத்தமாக மூடிவிட்டு கடையை சாத்தியது. இதற்கு முக்கியமான காரணம் ஏர்டெல் மற்றும் ஜியோ தான். இவ்விரு நிறுவனங்களும் இந்தியாவில் ஸ்பெக்டரத்தை ஏல முறையில் தான் அளிக்கப்பட வேண்டும் என டிராய் அமைப்பிடம் முறையிட்டது, ஆனால் ஸ்பேஸ்எக்ஸ் இதை இலவசமாக ஒதுக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தது.

இதனால் பல முறைய முயற்சி செய்தும் இந்தியாவுக்குள் நுழையாத ஸ்டாலிங்க் தேவை சமீபத்தில் நேபாளத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் தான் எலான் மஸ்க் - மோடி உடனான அமெரிக்க சந்திப்பு அனைத்து தடைகளையும் உடைத்து தற்போது இந்தியாவில் ஸ்டார்லிங்க் அறிமுகம் செய்ய ரூட்டுப்போட்டுக்கொடுத்துள்ளது ஏர்டெல்.
எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் ஏர்டெல் நிறுவனம் இணைந்து, ஸ்டார்லிங்கின் அதிநவீன அதிவேக இண்டர்நெட் சேவையை நாடு முழுவதும் அறிமுகப்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளது. இதை வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் என்றால் மிகையில்லை, பல வருட போராட்டத்தின் வெற்றி.
இந்திய சந்தையில் முதல் முறையாக செயற்கோகோள் அடிப்படையிலான பிராண்ட்பேன்ட் சேவைக்காக கையெழுத்திடப்பட்டுள்ளது. இருப்பினும், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையை வணிக ரீதியாக செயல்படுத்த தேவையான ஒழுங்குமுறை அனுமதிகளைப் பெற வேண்டும், என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஏர்டெல் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஸ்பேஸ்எக்ஸ் - ஏர்டெல் கூட்டணி வெறும் சேவை வழங்குதலுடன் மட்டும் நின்றுவிடாமல், ஏர்டெல் நிறுவனத்தின் விரிவான ரீடைல் விற்பனை நிலையங்களின் மூலம் ஸ்டார்லிங்க் hardware விற்கப்படலாம். ஏர்டெல் நிறுவனத்தின் வர்த்தக இணைப்புகள் வாயிலாக கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு ஸ்டார்லிங்க் சேவைகளை விற்க முடியும்.
குறிப்பாக, இந்தியாவில் மலை, கிராமம், காடுகளில் கூட இனி அதிவேக இண்டர்நெட் பயன்பாடு இக்கூட்டணி மூலம் கிடைக்கும். இதன் மூலம் நாட்டில் பின்தங்கிய மக்கள் அதிவேக இண்டர்நெட் வாயிலாக கல்வி முதல் பேமெண்ட் வரையில் அனைத்து விதமான வசதிகளையும் பெற முடியும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications