ஏர்டெல் நிறுவனத்தின் CEO திடீர் மாற்றம்.. கோபால் நிலைமை என்ன ஆச்சு..?!

சென்னை: இந்தியாவின் 2வது பெரிய டெலிகாம் சேவை நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் முக்கியமான தலைமை மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இந்திய டெலிகாம் நிறுவனங்கள், சேவை கட்டணத்தை உயர்த்திவிட்டு செப்டம்பர் காலாண்டில் அதிகப்படியான லாபத்தைப் பதிவு செய்த நிலையில், ஏர்டெல் எப்படியாவது ஜியோ-வை முந்திவிட வேண்டும் என்ற முக்கிய இலக்கில் இருக்கும் சூழ்நிலையில் சிஇஓ மாற்றப்பட்டு உள்ளார்.

பார்தி ஏர்டெல் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் 2026 ஜனவரி 1 முதல் தற்போதைய தலைமை செயல்பாட்டு அதிகாரியான (COO) ஷஷ்வத் சர்மா, நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்க உள்ளார் என அதிரடியாக அறிவித்துள்ளது.

ஏர்டெல் நிறுவனத்தின் CEO திடீர் மாற்றம்.. கோபால் நிலைமை என்ன ஆச்சு..?!

கடந்த 12 ஆண்டுகளாக நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து வரும் கோபால் விட்டல், துணைத் தலைவராக
(Vice Chairman) பொறுப்பேற்க உள்ளார். இதன் மூலம் கோபால் விட்டல் பதவி உயர்வு பெற்று அதிகப்படியான அதிகாரத்தைப் பெற உள்ளார்.

புதிய பதவியேற்றும் கோபால் விட்டல், ஜனவரி 1, 2026 முதல் ஏர்டெல் ஆப்பிரிக்கா பிஎல்சி நிறுவனத்தின் நிர்வாக குழுவில் இணைய உள்ளார். இதோடு ஏர்டெல் சாம்ராஜ்ஜியத்தின் மொத்த நெட்வொர்க், டிஜிட்டல் தொழில்நுட்பம், கொள்முதல் மற்றும் திறன் மேம்பாடு போன்ற முக்கிய துறைகளில் பணியாற்றுவார்.

ஷஷ்வத் சர்மா-வுக்கு சிஇஓ பொறுப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் இனி வரும் காலத்தில் ஏர்டெல் சாம்ராஜ்ஜியத்தின் வாடிக்கையாளர் வணிகத்தை முழுமையாகக் கவனித்துக்கொள்வார். மேலும் ஷஷ்வத் சர்மா-வுக்கு கோபால் விட்டல் வழிகாட்டுவார்.

கோபால் விட்டலின் தலைமையின் கீழ், ஏர்டெல் நிறுவனம் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியையும் மாற்றத்தையும் கண்டுள்ளது. இந்நிறுவனம் அதன் சேவை பிரிவை விரிவுபடுத்தியது மற்றும் மொபைல் சேவை பிரிவில் அதன் வருவாய் சந்தைப் பங்கீட்டை 30% இலிருந்து 40% ஆக உயர்த்தியுள்ளது.

இதை விட முக்கியமாக கோபால் விட்டலின் தலைமையின் கீழ் ஏர்டெல்-லின் சந்தை மூலதனத்தை ஐந்து மடங்கு அதிகரித்து, 100 பில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+