சென்னை: சும்மா கிழி... என, தர்பார் படத்துக்கு, ரசிகர் மனதில் அனல் பற்ற வைத்து இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஒரு நடிகருக்காகவே ஒரு இஸம் (Ism)இருக்கிறது என்றால் அது, ஸ்டைல் சாம்ராட் ரஜினிக்கு மட்டும் தான்.
அந்த அளவுக்கு வெறி பிடித்த ரசிகர்கள், நம் ரஜினிகாந்துக்கு அதிகம். அந்த ரசிகர் படையைத் தான் இப்போது பார்தி ஏர்டெல் குறி வைத்து களம் இறங்கி இருக்கிறது.
அப்படி என்ன செய்யப் போகிறார்கள்..? ரஜினியை வைத்து பார்தி ஏர்டெல் போடும் திட்டங்கள் தான் என்ன..? வாங்க பார்ப்போம்.
தர்பார்
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், அடுத்த சில நாளில் வெளி வர இருக்கும், ஒரு முழு நீள ரஜினி படம் தான் தர்பார். இதில் நயன்தாரா, சுனில் ஷெட்டி உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள், பெரிய பெரிய டெக்னீஷியன்கள் என பெரிய ஸ்டார் படையே வேலை பார்த்து இருக்கிறார்கள். இப்போது படத்துக்கான டிக்கெட்டுகள் எங்கு பார்த்தாலும் ஹவுஸ் ஃபுல்லாகிக் கொண்டு இருக்கின்றன.
ஏர்டெல்
இந்த நேரத்தில் தான், பார்தி ஏர்டெல், தமிழகத்தில் தன் வியாபாரக் கிளையைப் பரப்ப, தர்பார் படக் குழுவினருடன் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து இருக்கிறார்களாம்.
இந்த ஒப்பந்தப் படி, பார்தி ஏர்டெல் நிறுவனம் ஒரு லிமிடெட் எடிஷன் தர்பார் பிராண்டெட் சிம் கார்ட்களையும், ப்ரீ பெய்ட் ரீசார்ஜ் திட்டங்களையும் வெளியிடுவார்களாம்.
வழக்கம் போல சலுகை
இந்த தர்பார் பிராண்டெட் சிம் கார்ட்கள் மற்றும் ப்ரீ பெய்ட் ரீசார்ஜ்களுக்கு என்று தனியாக சில சிறப்பு சலுகைகள், அன்லிமிடெட் கால் வசதிகள், ரோமிங் சலுகைகள், டேட்டா சலுகைகள் எல்லாம் கொடுப்பார்களாம். அதோடு ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் அப்ளிகேஷனில் ஒரு இண்டராக்விட் க்விஸ் போட்டியும் நடத்துவார்களாம்.
வெற்றியாளர்கள்
பார்தி ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு என்றே பிரத்யேகமாக, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் அப்ளிகேஷனில் நடத்தப்படும் அந்தப் போட்டியில், வெற்றி பெறுபவர்களை, தர்பார் படக் குழுவினர் சந்திப்பார்களாம். அதோடு வெற்றியாளர்களுக்கு தர்பார் படத்துக்கான இலவச டிக்கெட்டுக்களையும் பார்தி ஏர்டெல் நிறுவனம் வழங்க இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்களாம்.
சும்மா கிழி தான்
இப்படி ஏர்டெல் ரஜினி படங்களுடன் கை கோர்ப்பது இது முதல் முறை கிடையாதாம். கபாலி, காலா படங்கள் வெளியான போதும், இதே போல ஒப்பந்தங்களைச் செய்து இருக்கிறார்களாம். அந்த சலுகைகளை, பார்தி ஏர்டெல் அறிவித்ததில் இருந்தே, தமிழக ரஜினி ரசிக பெருமக்கள், பயங்கரமாக ஆதரவு கொடுத்ததாகச் சொல்லி இருக்கிறார் தமிழகத்தின் பார்தி ஏர்டெல் சி இ ஓ மனோஜ் முரளி. எனவே இந்த முறையும் தன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ள தர்பாருடன் கை கோர்த்து இருக்கிறது ஏர்டெல்.
க்விஸ் போட்டி
தர்பார் படக் குழுவினரை சந்திக்க விரும்புபவர்கள், ஏர்டெல் நடத்தும், இந்த ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் அப்ளிகேஷனில் நடத்தும் க்விஸ் போட்டியில் கலந்து கொள்ளுங்கள். வெற்றி பெறுபவர்கள் தர்பார் படக் குழுவினரை நேரடியாகச் சந்திக்கலாம். இலவசமாக தர்பார் பட டிக்கெட்டுகளையும் பெறலாம். வெற்றி பெற எங்கள் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள் ப்ரோஸ் அண்ட் சிஸ்..!
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications