தொலைத் தொடர்பு துறையில் ரிலையன்ஸ் ஜியோவின் வருகைக்கு பின்னர், பல பிரீபெய்டு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஜியோவின் போட்டியை சமாளிக்க ஜியோ, வொடபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்களும் பல திட்டங்களை அறிவித்து வருகின்றன.
இந்த மூன்று நிறுவனங்களிலும் 100 ரூபாய்க்கு கீழ் உள்ள பிரிபெய்டு திட்டங்களை பார்க்கலாம் வாருங்கள்.
பயனுள்ள குறைந்த மதிப்பிலான ரீசார்ஜ் திட்டங்கள்
பொதுவாக இந்த மாதிரியான மலிவான திட்டங்கள் வார இறுதியில், மாத இறுதியிலும், விடுமுறை நாட்களிலும் தேவைப்படுகின்றன. குறிப்பாக இந்தியாவில் உள்ள அனைத்து தொலைத் தொடர்பு ஆப்ரேட்டர்களும் வரம்பற்ற தரவு மற்றும் அழைப்புத் திட்டங்களை வழங்குகிறார்கள். இருப்பினும், ஒவ்வொரு முறையும் அதிக விலை திட்டத்துடன் ரீசார்ஜ் செய்வது அவசியமில்லை, பல முறை பயனர்கள் மலிவான திட்டத்துடன் ரீசார்ஜ் செய்ய விரும்புகிறார்கள், நிறுவனங்கள் இதற்கும் விருப்பங்களை வழங்குகின்றன. இதே உங்களிடம் இரண்டாம் எண் இருந்தால், குறைந்த கட்டண திட்டத்துடன் ரீசார்ஜ் செய்ய விரும்பினால், இந்த கட்டண திட்டங்களை நீங்கள் தேர்வு செய்யலாம். இதன் மூலம் நீங்கள் பயனடையலாம்.
ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்கள்
ரூ.19 இந்த திட்டத்தின் மூலம் 200MB டேட்டா 2 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
ரூ.48 திட்டம் 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, இது மூன்று நாட்கள் வேலிடிட்டியை கொண்டது.
ரூ.49 திட்டம் 100MB டேட்டா மற்றும் டாக்டைமும் 28 நாட்களுக்கு வழங்குகிறது.
ரூ.79 திட்டம் 200MB டேட்டா மற்றும் டாக்டைம் வழங்குகிறது. இது 28 நாட்கள் வேலிடிட்டியை கொண்டது.
வீ-யின் ரீசார்ஜ் திட்டங்கள்
ரூ.16 திட்டத்தில் 1ஜிபி டேட்டா 24 மணி நேரம் வேலிட்டியை வழங்குகிறது. வீ ஆப்பில் மூவி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான அணுகலையும் வழங்குகிறது.
ரூ.19 திட்டத்தில் 200MB டேட்டா மற்றும் அன்லிமிடெட் டாக்டைம் இரண்டு நாட்களுக்கு வழங்குகிறது.
ரூ.39 திட்டத்தில் 28 நாட்களுக்கு 100 MB டேட்டா மற்றும் டாக்டைமினை வழங்குகிறது.
ரூ.48 திட்டத்தில் 28 நாட்களுக்கு 3 ஜிபி டேட்டாவினை வழங்குகிறது. இது போன் அல்லது இணையம் மூலம் ரீசார்ஜ் செய்தால் 200MB டேட்டா அதிகம் கிடைக்கிறது.
ரூ.49 காம்போ திட்டத்தில் 300 MB டேட்டாவினை 28 நாட்களுக்கு வழங்குகிறது.
ரூ.79 திட்டத்தில் 400 MB டேட்டா மற்றும் டாக்டைம் 64 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இது போன் அல்லது இணையம் மூலம் ரீசார்ஜ் செய்தால் 200MB டேட்டா அதிகம் கிடைக்கிறது.
ரூ.98 திட்டத்தில் 12ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
ஜியோ திட்டங்கள்
ரூ.10 திட்டத்தில் 124 ஐயூசி நிமிடம் மற்றும் 1 ஜிபி டேட்டாவினையும் வழங்குகிறது.
ரூ.20 திட்டத்தில் 249 ஐயூசி நிமிடம் மற்றும் 2 ஜிபி டேட்டாவினையும் வழங்குகிறது.
ரூ.50 திட்டத்தில் 656 ஐயூசி நிமிடம் மற்றும் 5 ஜிபி டேட்டாவினையும் வழங்குகிறது.
ரூ.100 திட்டத்தில் 1362 ஐயூசி நிமிடம் மற்றும் 10 ஜிபி டேட்டாவினையும் வழங்குகிறது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications