கடந்த ஜூலை மாதம் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய முன்னணி தொலை தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டண உயர்வை அறிவித்தன. இதனால் பல பயனர்களும் எதிர்ப்பு தெரிவித்து தங்களுடைய கருத்துக்களை சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து வந்தனர். ஜியோ மற்றும் ஏர்டெல் பல்வேறு பயனர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திட்டங்களை வழங்குகின்றன. ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 319 திட்டம் 1 மாதம் செல்லுபடியாகும் திட்டம் என்றாலும், ஏர்டெல் இதே போன்ற நன்மைகளுடன் பல திட்டங்களை வழங்குகிறது. அதன் விவரங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பாப்போம்.
ஏர்டெல் மாதாந்திர திட்டங்கள்: ஏர்டெல் சுமார் 4 ப்ரீபெய்ட் திட்டங்களை 1 மாத வேலிடிட்டியுடன் வழங்குகிறது. ஏர்டெல் பயனர்களுக்கு பலவிதமான அம்சங்களையும் இதில் வழங்குகிறது.

ரூ. 379 திட்டம்: இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால் வசதி, ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் அன்லிமிடெட் 5 ஜி டேட்டா ஆகியவை அடங்கும். இந்த திட்டம் செல்லுபடியாகும் காலம் ரீசார்ஜ் தேதியிலிருந்து ஒரு மாதத்திற்கு நீடிக்கும்.
ரூ.429 திட்டம்: இந்த திட்டத்தில் பயனர்கள் தினசரி 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால் வசதி, ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் அன்லிமிடெட் 5 ஜி டேட்டா ஆகியவற்றைப் பெறுகிறார்கள்.
ரூ. 609 திட்டம்: இந்த திட்டமானது ஒரு மாத செல்லுபடியாகும் காலத்திற்கு 60 ஜிபி மொத்த டேட்டா, அன்லிமிடெட் கால் வசதி மற்றும் 300 SMS ஆகியவற்றை வழங்குகிறது.
ஜியோவின் 1 மாத செல்லுபடியாகும் திட்டம்: ரிலையன்ஸ் ஜியோ ஒரு மாத வேலிடிட்டியுடன் ரூ.319 ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது.
ஜியோவின் ரூ.319 மாதாந்திர திட்டம்: இந்தத் திட்டத்தில் பயனர்கள் 1.5 ஜிபி தினசரி அதிவேக டேட்டாவைப் பெறமுடியும். இந்த வரம்பை அடைந்த பிறகு டேட்டா வேகம் குறைக்கப்படுகிறது ஆனால் டேட்டா கிடைக்கும்.
அன்லிமிடெட் கால் வசதி: இந்த அம்சம் இந்தியா முழுவதும் உள்ள எந்த நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் கால் வசதியை வழங்குகிறது. மேலும், ஒரு நாளைக்கு 100 SMS வசதியையும் வழங்குகிறது.
ஜியோ ஆரம்பத்தில் ரூ. 296 மற்றும் ரூ. 259 திட்டங்களுடன், இதே அம்சங்களை வழங்கியது. ஆனால் வெவ்வேறு திட்டங்களுடன், இந்த திட்டங்கள் நிறுத்தப்பட்டாலும், ஜியோவின் ரூ.319 திட்டம் 1 மாத செல்லுபடியாகும் திட்டங்களில் பிரபலமான தேர்வாக உள்ளது.


Click it and Unblock the Notifications