ஏர்டெல்லின் அசத்தலான சலுகை.. ஜியோவுக்கு போட்டியாக செம திட்டம்.. வோடபோனின் நிலவரம் என்ன..!

ரிலையன்ஸ் ஜியோவின் வருகைக்கு பின்னர் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பெரும் சவாலை கண்டு வருகின்றன.

இதனால் ஒவ்வொரு நிறுவனமும் தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள பல சலுகைகளை அறிவித்து வருகின்றன. குறிப்பாக 2021 ஆரம்பத்திலேயே வாடிக்கையாளர்களை மீண்டும் கவரும் விதமாக இலவச சேவையை கொண்டு வந்துள்ளது.

இது போட்டி நிறுவனங்களான பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் கதிகலங்கி தான் போயுள்ளன. ஏனெனில் ஏற்கனவே ஜியோவில் போட்டியை சமாளிக்க முடியாமல் திணறி வரும் நிறுவனங்கள், பெரும் கடன் பிரச்சனையிலும் தத்தளித்து வருகின்றன.

ஏர்டெல்லின் ரூ.199 திட்டம்

ஏர்டெல்லின் ரூ.199 திட்டம்

எனினும் எவ்வளவு தான் பிரச்சனைகள் இருந்தாலும், ஜியோவுக்கு எதிராக, ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்களும் பல சலுகைகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் தற்போது ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனம் 199 ரூபாய்க்கான திட்டத்தினை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தினசரி 1.5 ஜிபி டேட்டாவை வழங்க தொடங்கியுள்ளது. இது 28 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது.

ஏர்டெல்லின் அதிரடி மாற்றம்

ஏர்டெல்லின் அதிரடி மாற்றம்

ஏர்டெல் நிறுவனம் முன்னதாக இந்த 199 ரூபாய் திட்டத்தில் தினசரி 1 ஜிபி டேட்டா மற்றும் சலுகைகளை வழங்கி வந்தது. இதோடு அன்லிமிடெட் கால் சேவையும் வழங்கப்பட்டது. அதோடு தினசரி 100 இலவச எஸ் எம் எஸ்களையும் வழங்கி வந்தது. இந்த நிலையில் ஜியோவின் மறுசீரமைப்புக்கு பிறகு, ஏர்டெல்லின் இந்த அதிரடி நடவடிக்கயானது வந்துள்ளது.

எந்தெந்த இடங்களில் சலுகை

எந்தெந்த இடங்களில் சலுகை

இந்த திட்டத்துடன் ஹலோ டியூன், விங் மியூசிக், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆஃப் சந்தா என அனைத்தும் இலவசமாக வழங்கி வருகிறது. ஏடெல்லின் இந்த சலுகை மூலம் மொத்தம் 42 ஜிபி டேட்டா கிடைக்கும். ஏர்டெல்லின் இந்த சலுகையானது
ஏர்டெல்லின் வலைத்தளம் மற்றும் ஏர்டெல் தேங்க்ஸ் ஆஃப் ஆகியவற்றில் கிடைப்பதாக டெலிகாம் டால்க் வலைத்தளம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த சலுகையானது தற்போது ஆந்திரா மற்றும் தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட சில பகுதிகளில் மட்டும் கிடைப்பதாகவும் தெரிகிறது.

ஏர்டெல்லின் ரூ.249 திட்டம்

ஏர்டெல்லின் ரூ.249 திட்டம்

ஏர்டெல்லின் 249 ரூபாய் திட்டத்தினை போல் தான் இந்த, 199 திட்டமும். ஏனெனில் இந்த 249 ரூபாய் திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டா மற்றும் 28 நாட்களில் வேலிடிட்டியையும் வழங்கியது. ஆக அந்த திட்டத்தினை போலவே இந்த திட்டமும் மாற்றியமைத்துள்ளது.

ஜியோ Vs ஏர்டெல் ஒப்பீடு

ஜியோ Vs ஏர்டெல் ஒப்பீடு

கடந்த ஜனவரி 1 அன்று ஜியோ நிறுவனம் தனது ஐயூசி கட்டணத்தினை நீக்கியதோடு, தனது புதிய சில திட்டங்களையும் அறிவித்தது. இது நிச்சயம் ஏர்டெல் வோடபோனுக்கு போட்டியாக அறிவித்து வருகிறது. இந்த ஏர்டெல் நிறுவனம், ஜியோவின் 199 ரூபாய்க்கு திட்டத்திற்கு போட்டியாக அறிவித்துள்ளது. இவ்விரு நிறுவனங்களும் தினசரி 1.5 ஜிபி டேட்டாக்களையும் வழங்குகின்றன. இதிலும் ஏர்டெல்லினை போலவே தினசரி 100 இலவ்ச எஸ் எம் எஸ்கள் வரம்பற்ற கால்சேவை என பலவும் வழங்குகின்றது.

வோடபோன் Vs ஜியோ Vs ஏர்டெல்

வோடபோன் Vs ஜியோ Vs ஏர்டெல்

எனினும் வோடபோன் ஐடியா நிறுவனம் 199 ரூபாய் திட்டத்தில் தினசரி 1 ஜிபி டேட்டாவினை மட்டும் வழங்குகிறது. வரம்பற்ற கால் சேவை, தினசரி 100 இலவச எஸ் எம் எஸ்களையும் வழங்குகிறது. எனினும் இதன் வேலிடிட்டி 24 நாட்கள் மட்டுமே. ஆக ஏர்டெல், ஜியோவுடன் ஒப்பிடும்போது டேட்டாவும் குறைவு, அதேசமயம், வேலிடிட்டியும் குறைவு.

வோடபோனின் பெஸ்ட் பிளான்

வோடபோனின் பெஸ்ட் பிளான்

வோடபோனின் 595 ரூபாய் மதிப்பிலான திட்டத்தினை வழங்கி வருகின்றது. இந்த திட்டமானது 56 நாட்கள் வேலிடிட்டியை கொண்டது. இந்த திட்டத்தில் 1 வருட ஜீ பைவ் சந்தா, தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ், தினசரி 100 இலவச எஸ் எம் எஸ் என பல சலுகைகளை வழங்குகிறது.

ஏர்டெல்லில் இப்படி ஒரு திட்டமும் உண்டு

ஏர்டெல்லில் இப்படி ஒரு திட்டமும் உண்டு

மேலும் ஏர்டெல் நிறுவனம் 199 ரூபாய் மற்றும் 249 ரூபாய் திட்டங்களுக்கு இடையில், ஏர்டெல் நிறுவனம் 219 ரூபாய் மதிப்புள்ள பேக் ஒன்றையும் கொண்டுள்ளது. இந்த 219 ரூபாய் திட்டத்தில் தினசரி 1 ஜிபி டேட்டா உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நன்மைகளுடன், 28 நாட்கள் வேலிடிட்டியையும் கொண்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+