நாட்டில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. அந்த வகையில், நாட்டின் இரண்டாவது பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோவுக்கு எதிராக ஒரு நடவடிக்கையை எடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதாவது சுனில் மிட்டலிடல் எடுத்துள்ள இந்த நடவடிக்கையை ஜியோவிற்கு பெரும் போட்டியாக அமையவுள்ளது.
பார்தி ஏர்டெல், அதன் துணை நிறுவனமான பார்தி ஹெக்ஸாகாம் லிமிடெட் கௌதம் அதானியின் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் டேட்டா நெட்வொர்க்ஸ் நிறுவனத்தை வாங்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதன் மூலம் கடந்த தொலைத்தொடர்பு ஏலத்தில் அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் லிமிடெட் (ADNL) கையகப்படுத்திய 400 MHz ஸ்பெக்ட்ரத்தை ஏர்டெல் பயன்படுத்த உள்ளது.

தொலைத்தொடர்பு வணிகத்தில் தனது 'பெரிய திட்டங்களுக்கு' முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி, போட்டி மற்றும் மூலதனம் மிகுந்த துறையிலிருந்து வெளியேற முடிவு செய்தார். மேலும், 2022 ஏலத்தில் கையகப்படுத்தப்பட்ட அலைக்கற்றைகளை பார்தி ஏர்டெல்லுக்கு விற்க முடிவு செய்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் 26 GHz அலைவரிசையில் 400 MHz அலைவரிசையை ADNL தோராயமாக ரூ.212 கோடிக்கு வாங்கியது. குஜராத் (100 MHz), மும்பை (100 MHz), ஆந்திரப் பிரதேசம் (50 MHz), ராஜஸ்தான் (50 MHz), கர்நாடகா (50 MHz) மற்றும் தமிழ்நாடு (50 MHz) ஆகிய மாநிலங்களில் 26 GHz அலைவரிசையில் 400 MHz அலைவரிசையைப் பயன்படுத்துவதற்கான உரிமைகளை சுனில் மிட்டல் வாங்குகிறார்.
இது தொடர்பாக இரு நிறுவனங்களும் இறுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், ரூ.11.11 லட்சம் கோடி சந்தை மதிப்பைக் கொண்டுள்ளது. நேற்று ஏர்டெல் பங்குகள் ரூ.1,848.20 இல் முடிவடைந்தன. ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, சுனில் மிட்டல் 13.8 பில்லியன் அமெரிக்க டாலர் நிகர மதிப்புடன் இந்தியாவின் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார்.
ஜனவரி 2025 இல், வயர்லைன் மற்றும் மொபைல் பிரிவுகளில் புதிய சந்தாதாரர் சேர்க்கைகளின் அடிப்படையில் ஏர்டெல் நாட்டிலேயே முதலிடத்தைப் பிடித்தது. TRAI தரவுகளின்படி, ஜனவரி மாதத்தில் நிறுவனம் முறையே 16.53 லட்சம் மற்றும் 1.17 லட்சம் புதிய சந்தாதாரர்களைப் பெற்றுள்ளது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, சந்தையில் ஏர்டெல்லின் முக்கிய போட்டியாளராக உள்ளது.
அதானியுடனான ஒத்துழைப்பு ஏர்டெல் பல்வேறு மாநிலங்களில் அதன் செயல்பாடுகளை விரிவுபடுத்த உதவும். ஜியோவிற்கு பெரிய ரேஞ்ச் சிக்கல்கள் இருப்பதாக ஏற்கனவே நிறைய விமர்சனங்கள் உள்ளன. ஏர்டெல்லின் புதிய நடவடிக்கை ஜியோவிற்கு கடுமையான சவாலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
விமான நிலையங்கள், சிமென்ட், தரவு மையங்கள், மின்சாரம் மற்றும் பிற உள்கட்டமைப்பு திட்டங்கள் போன்ற துறைகளில் அதானி குழுமம் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் துறைகளிலும் சிறப்பாக செயல்படும் என்று நம்பப்பட்டது. ஆனால், அதானி குழுமம் இந்தப் பிரிவில் பெரிய அளவில் செல்ல விரும்பவில்லை. அதன் சொந்த தேவைகளுக்கு ஸ்பெக்ட்ரத்தைப் பயன்படுத்துகிறது என்று கூறியது. இதனை ஏர்டெல் தற்போது வாங்குவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications