ஏர்டெல் வாடிக்கையாளர்களே.. ரூ. 500க்கும் கீழ் உள்ள பெஸ்ட் ஏர்டெல் பிரீபெய்ட் திட்டங்கள்!

சென்னை: இந்த டிஜிட்டல் உலகத்தில் மொபைலின் பயன்பாடு அதிகமாக இருந்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு பல்வேறு நெட்ஒர்க் ஆப்ரேட்டர்களும் புதிய பிரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்கின்றன. அந்த வகையில் ஏர்டெல் ரூ.279 மதிப்பிலான பிரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கூடுதல் அம்சங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.

சில வருடங்களுக்குப் முன்பு 15 ரூபாய், 10 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் அம்சம் இருந்தது. கார்டில் உள்ள கருப்புக் கோட்டை தேய்த்து அதில் உள்ள எண்ணிற்கு கால் செய்வதன் மூலம் ரீசார்ஜ் செய்ய முடியும். ஆனால் தற்போது நிலையே மாறிவிட்டது யாரும் கடைகளுக்கு சென்று இது போன்ற கார்டுகளை வாங்கி அவற்றை சுரண்டி பயன்படுத்துவதில்லை. வீட்டில் இருந்தே ஆன்லைன் பேமெண்ட் தளங்கள் மூலம் ரீசார்ஜ் செய்து கொள்கின்றனர்.

 ஏர்டெல் வாடிக்கையாளர்களே.. ரூ. 500க்கும் கீழ் உள்ள பெஸ்ட் ஏர்டெல் பிரீபெய்ட் திட்டங்கள்!

ஏர்டெல் தனது புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 45 நாட்களுக்கு அன்லிமிடெட் அழைப்புகளுடன் ரூ.279 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மற்ற ப்ரீபெய்ட் திட்டங்களைப் போலவே இதுவும் குறைந்த டேட்டாவை கொண்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் ஏர்டெல் உங்களுக்கு 2ஜிபி மொத்த டேட்டாவை வழங்குகிறது. நீங்கள் அதிகமான டேட்டாக்களை பெற விரும்புகிறீர்கள் என்றால் அதற்கென்று தனி ஏர்டெல் டேட்டா வவுச்சர்களை உபயோகித்துக் கொள்ள வேண்டும்.அன்லிமிடெட் கால் வசதியைப் பெற விரும்புவர்கள் இந்தத் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் ஏர்டெல் ரூ.155க்குக் குறைவான தொகையில் சில அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டங்களை வழங்குகின்றன.

ஏர்டெல் வழங்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள்:

ஏர்டெல் ரூ.155 திட்டம்: ரூ.155 ஏர்டெல் திட்டமானது 1ஜிபி மொத்த டேட்டாவை கொண்டுள்ளது. மேலும் இது 24 நாட்கள் வேலிடிட்டியை கொண்டுள்ளது. நீங்கள் அன்லிமிடெட் கால் மற்றும் 300 SMS வசதிகளைப் பெறுவீர்கள்.

ஏர்டெல் ரூ.179 திட்டம்: ரூ.179 ஏர்டெல் திட்டமானது 2ஜிபி மொத்த டேட்டா மற்றும் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் பிளான். இதன் மூலம் நீங்கள் அன்லிமிடெட் கால் மற்றும் 300 SMS-களைப் பெறுவீர்கள்.

ஏர்டெல் ரூ.199 திட்டம்: ரூ.199 ஏர்டெல் திட்டத்தில் 3ஜிபி மொத்த டேட்டா மற்றும் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும். நீங்கள் அன்லிமிடெட் கால் மற்றும் 300 SMS-களை பெறுவீர்கள்.

ஏர்டெல் ரூ.279 திட்டம்: ரூ.279 ஏர்டெல் திட்டமானது 2ஜிபி மொத்த டேட்டாவுடன் 45 நாட்கள் வேலிடிட்டியை கொண்டுள்ளது. மேலும் அன்லிமிடெட் கால் மற்றும் 600 SMS-களை பெறலாம்.

ஏர்டெல் ரூ.296 திட்டம்: ரூ.296 ஏர்டெல் திட்டத்தில் 25ஜிபி மொத்த டேட்டா மற்றும் 30 நாட்கள் வேலிடிட்டியை கொண்டுள்ளது. நீங்கள் அன்லிமிடெட் கால் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS-களை பெறுவீர்கள். இதில் ரூ.296 திட்டத்தில் unlimited 5ஜி டேட்டாவின் நன்மையும் பெறலாம்.

ஏர்டெல் ரூ.329 திட்டம்: ரூ.329 ஏர்டெல் திட்டத்தில் 4ஜிபி மொத்த டேட்டா மற்றும் 35 நாட்கள் வேலிடிட்டியை கொண்டுள்ளது . நீங்கள் அன்லிமிடெட் கால் மற்றும் 300 SMS-களை பெறுவீர்கள்.

ஏர்டெல் ரூ.395 திட்டம்: ரூ.395 ஏர்டெல் திட்டம் 6ஜிபி மொத்த டேட்டா மற்றும் 70 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. அன்லிமிடெட் கால் மற்றும் 600 SMS வசதிகளைப் பெறுவீர்கள்.

ஏர்டெல் ரூ.455 திட்டம்: ரூ.455 ஏர்டெல் திட்டமானது 6ஜிபி மொத்த டேட்டாவுடன் 84 நாட்கள் வேலிடிட்டியை கொண்டுள்ளது . நீங்கள் அன்லிமிடெட் கால் மற்றும் 900 SMS பெறுவீர்கள்.

ஏர்டெல் ரூ.489 திட்டம்: ரூ.489 ஏர்டெல் திட்டத்தில் 50ஜிபி மொத்த டேட்டா மற்றும் 30 நாட்கள் வேலிடிட்டியை கொண்டுள்ளது. நீங்கள் அன்லிமிடெட் கால் மற்றும் 300 SMS பெறுவீர்கள். மேலும் ரூ.489 திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவின் நன்மையும் உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+