நாட்டின் அதிகளவு சம்பளம் பெறும் நடிகையான ஐஸ்வர்யா ராய் பச்சன் சிறந்த நடிகை மட்டுமல்ல. திறமையான மாடல், சினிமா தயாரிப்பாளர், கல்வியாளர், தொழிலதிபரும் கூட. முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய் தமிழில் இயக்குநர் மணி ரத்னத்தின் இருவர் படத்தில் சினிமாவுக்கு அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து ஹம் தில் தே சுகே சனம், மொஹபத்தீன், தேவ்தாஸ், தூம் 2, குரு, ஜோதா அக்பர் போன்ற ஹிட் படங்களில் நடித்துள்ளார். ஹாலிவுட் படங்களிலும் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார்.

இதன் மூலம் அவர் இதுவரை ரூ.776 கோடிக்கு அதிபராக உள்ளார், இதுவரையில் எந்தொரு உலக அழகியும் இந்த அளவுக்கு சம்பாதித்தது இல்லை. இந்த வகையில் சக உலக அழகிகள் மத்தியில் ஐஸ்வர்யா ராய் வளர்ச்சி கொஞ்சம் ஓவர் தான் என்று முணுமுணுக்கின்றனர்.
2021 ஆம் ஆண்டில் வெளியிடப்படாத அளவுக்கு மிகப் பெரிய தொகையை பாஸிபிள் (Possible) என்ற ஹெல்த் கேர் நிறுவனத்தில் ஐஸ்வர்யா ராய் முதலீடு செய்ததாகக் கூறப்படுகிறது. இது தவிர தனது தாயார் விரிந்தா ராயுடன் சேர்ந்து பெங்களூரில் உள்ள சுற்றுச்சூழல் ஸ்டார்ட்அப் நிறுவனமான அம்பியில் (Ambee) ரூ.1 கோடி முதலீடு செய்துள்ளார்.
திறமையான நடிகையான ஐஸ்வர்யா ராய் ஒரு படத்துக்கு ரூ.10 முதல் ரூ.12 கோடி வரை சம்பளமாகப் பெறுகிறார். கடைசியாக மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் ரூ.10 கோடி சம்பளத்தில் நடித்தார்.
கடந்த 20 ஆண்டுகளில் ஐஸ்வர்யா ராய் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பிராண்டுகளான கேட்பர்ரி, பாமோலிவ், லாக்மே காஸ்மடிக்ஸ், கோகோ கோலா, கல்யாண் ஜுவல்லர்ஸ், பிலிப்ஸ், டைட்டன் வாட்ச் உள்ளிட்டவற்றின் விளம்பரத்தில் நடித்துள்ளார்.
இத்துடன் எல்ஓரியல், ஸ்விஸ் லக்சுரி வாட்ச் பிராண்டான லாங்கைன்ஸ்க்கும் நடித்துள்ளார். விளம்பர மாடலிங் பணிக்கு ஒரு நாளுக்கு அவர் ரூ.6 முதல் ரூ.7 கோடி வரை சம்பளம் வாங்குவதாகக் கூறப்படுகிறது.
ஐஸ்வர்யா ராய், பச்சன் குடும்பத்திற்கு சென்ற பின்பு தான் அவருடைய சொத்து மதிப்பு பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தது என கருத்து இருந்தாலும் இவருடைய புகழ், பிற நடிகைகளுக்கு மத்தியில் ஒரு படிக்கு மேல் என்றால் மிகையில்லை.

அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கு சொந்தமாக துபாயின் சாங்ச்சுவரி ஃபால்ஸில் ஆடம்பரமான ஒரு மேன்ஷன் உள்ளது. மும்பையின் பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்ஸில் 2015 ஆம் ஆண்டில் ரூ.21 கோடியில் 5-பிஹெச்கே அப்பார்ட்மென்டை வாங்கினார்.
மும்பையின் வொர்லியில் உள்ள ஸ்கைலார்க் டவர்ஸில் அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யாவுக்கு 37ஆவது மாடியில் சொந்தமாக ஒரு வீடு உள்ளது. இந்தச் சொத்தை தம்பதியர் ரூ.41 கோடிக்கு வாங்கினர். சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.7.95 கோடியில் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரை வாங்கினார். அத்துடன் ரூ.2.33 கோடி மதிப்பிலான லெக்சஸ் எல்எக்ஸ் 570 மாடல் காரையும் ஐஸ்வர்யா வைத்துள்ளார்.
ரோல்ஸ் ராய்ஸ், லெக்சஸ் தவிர ஆடி ஏ8 காரையும் வைத்துள்ளார். இதன் விலை ரூ.1.56 கோடி.
இத்துடன் மெர்சிடஸ் பென்ஸ் எஸ்350டி கூப் மற்றும் மெர்சிடஸ் பென்ஸ் எஸ்500 மாடல் கார்களையும் வைத்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.
கடந்த சில ஆண்டுகளில் ஐஸ்வர்யா ராய் தனது வருமானத்தில் இருந்து பல்வேறு தொழில் நிறுவனங்கள், ரியல் எஸ்டேட், ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடுகளை செய்துள்ளார். இதன் மூலம் அவர் பல கோடி ரூபாய்களை வருமானமாக பெறுகிறார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications