ஐஸ்வர்யா ராய் பச்சனை பற்றி கேள்விப்படாதவர்கள் இருக்க முடியாது. மிகவும் திறமையான மற்றும் அழகான நடிகைகளில் இவரும் ஒருவர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா துறையில் தன் தடத்தை பதித்து பல்வேறு வெற்றி படங்களில் ஐஸ்வர்யா ராய் நடித்திருக்கிறார். தமிழ் திரைப்படங்களில் இவர் நடித்த சில பாடல்கள் இவருக்காகவே எழுதியது போல இருக்கும். ஜீன்ஸ் படத்தில் வரும் "அன்பே அன்பே" பாடலுக்கு இன்றளவும் தனிப்பட்ட பேன் பேஸ் இருக்கிறது.
ஐஸ்வர்யா ராய் பச்சன் 1994-ஆம் ஆண்டு உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிலிருந்து அவருடைய திரைத்துறை வாழ்க்கை தொடங்கியது. 1997-ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினத்தின் தமிழ் திரைப்படமான இருவர் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் இருந்து ஐஸ்வர்யா ராய் பச்சன் இந்தியாவில் மிகவும் செல்வாக்கு மிக்க நடிகைகளில் ஒருவராக மாறினார். இன்று வரை உலக அழகி ஐஸ்வர்யா ராய் என்று அழைக்கப்படுகிறார்.

2007-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா ராய். ஆனால் சமீப காலமாக ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் இருவரும் தங்கள் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை எதிர்கொள்வதாக தகவல்கள் பரவியுள்ளன. இதற்கு ஆதாரமாக சில வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. இருப்பினும் இது குறித்து எந்த அறிவிப்பையும் இன்றுவரை ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் வெளியிடவில்லை.
ஐஸ்வர்யா ராய் பச்சன் சமீபத்தில் தனது 51-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவர் சில மாதங்களுக்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன் பாகம் 1 மற்றும் பாகம் 2 அவருக்கு மிகுந்த பாராட்டுகளைப் பெற்று தந்தது. ரூ.776 கோடி நிகர மதிப்புடன் இந்தியாவின் பணக்கார நடிகைகளில் ஒருவராக ஐஸ்வர்யா ராய் உள்ளார்.
இவர் ஒவ்வொரு படத்திற்கும் ரூ.10 முதல் ரூ.12 கோடி வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆடம்பரமான வாழ்க்கை முறையை வாழ்கிறார். மேலும் பல விலைமதிப்பற்ற பொருட்களையும் வைத்திருக்கிறார். தற்போது இவர் மும்பையில் வசித்து வருகிறார். துபாயின் ஜுமேரா கோல்ஃப் எஸ்டேட்ஸில் ரூ.15 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு வீட்டையும் வைத்திருக்கிறார். ஐஸ்வர்யா ராய் பச்சன் மும்பையின் பாந்த்ராவில் 5 BHK பங்களா ஒன்றை வாங்கியுள்ளார். இதன் விலை இந்திய மதிப்புக்கு ரூ.21 கோடி ரூபாய். 2015-ஆம் ஆண்டே 5500 சதுர அடி பரப்பளவிலான இந்த வீட்டை ஐஸ்வர்யா ராய் வாங்கிவிட்டார்.
ஐஸ்வர்யா ராய் பல சொகுசு கார்களையும் வைத்திருக்கிறார். ரூ.6.95 கோடி மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், ரூ. 1.34 கோடி மதிப்பிலான ஆடி ஏ8எல், ரூ.1.98 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்500, ரூ.1.60 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்350டென்ஸ் கூபே, ரூ.2.84 கோடி மதிப்பிலான லெக்சஸ் LX 570 உள்ளிட்ட சொகுசு கார்களையும் வைத்திருக்கிறார்.
ஐஸ்வர்யா ராய் பச்சனின் மிகவும் மதிப்புமிக்க உடைகளில் ஒன்று நீதா லுல்லா வடிவமைத்த அவருடைய திருமண புடவை. இதன் தனிச்சிறப்பு என்னவென்றால் இந்த புடவையில் பயன்படுத்தப்பட்ட நூல்கள் தங்கத்தால் ஆனது. ஸ்வரோவ்ஸ்கி கிரிஸ்டல்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த புடவையின் மதிப்பு ரூ.75 லட்சம் என்று கூறப்படுகிறது. ஐஸ்வர்யா ராய் பச்சனின் இந்தப் புடவை இதுவரை இந்திய பிரபலங்கள் அணிந்திராத மிகவும் விலை உயர்ந்த புடவைகளில் ஒன்றாகும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் வாழ் இந்தியர்களே உஷார்!! 2 வருஷம் ஜெயில்!! ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் அரசு எச்சரிக்கை!!

துபாய் விமான நிலையத்தில் விபத்து..? எமிரேட்ஸ் சொன்ன குட் நியூஸ்..!! இந்தியர்கள் ஹேப்பி..!!

துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்!! இந்தியாவுக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் டீலர்கள்!!

துபாய் வாழ் இந்தியர்களே வீட்டை விட்டு வெளியேறினால் நடவடிக்கை: ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் எச்சரிக்கை

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications