உலக வங்கியின் அடுத்த தலைவருக்கான வேட்புமனு தாக்கல் நேரம் முடிவடைந்த பின்னர் இந்திய-அமெரிக்கரான அஜய் பங்கா அறிவிப்பு வரும் முன்னேற இப்பதிவிக்கு தயாராகிவிட்டார்.
அமெரிக்கா தவிர வேறு எந்த நாடுகளும் உலக வங்கியின் தலைவர் என்ற மிகவும் மதிப்புமிக்க பதவிக்கு மாற்று வேட்பாளரை முன்மொழிய காரணத்தால் அஜய் பங்கா தான் இப்பதவிக்கு தேர்வு செய்யப்படுவார் என உறுதியாக தெரிகிறது.
அமெரிக்க டெக் நிறுவனங்களை இந்தியர்களை ஆள்வதை தொடர்ந்து அமெரிக்க அதிபர் தேர்தலுக்கும் இந்திய-அமெரிக்கர்கள் போட்டிப்போட்டு வரும் வேளையில், உலக வங்கியின் தலைவர் பதவியும் இந்திய-அமெரிக்கரான அஜய் பங்கா-வுக்கு வருகிறது.
உலக வங்கி
உலக வங்கியின் தற்போதைய தலைவர் டேவிட் மல்பாஸ் விரைவில் பதவி விலகுவதாக அறிவித்ததை அடுத்து இந்த முக்கியமான பதவியில் யாரை நியமிப்பது என்பதை தாண்டி, சர்வதேச பொருளாதாரம் மந்தநிலையை நோக்கி சென்றுக்கொண்டு இருக்கும் வேளையில் உலகி வங்கியின் புதிய தலைவர் மிகவும் திறமையானவராகவும், அனைத்து சந்தைகளிலும் அனுபவம் மிக்கவராகவும் இருக்க வேண்டியது அவசியமாக உள்ளது.
அமெரிக்க அரசு பரிந்துரை
இந்த நிலையில் இந்திய அமெரிக்கரான அஜய் பங்கா-வை உலக வங்கியை வழிநடத்த அமெரிக்க அரசு பரிந்துரைப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிப்ரவரி மாதம் தெரிவித்தார். அஜய் பங்கா இந்தியாவில் பிறந்தாலும் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர் மட்டும் அல்லாமல் பராக் ஓபாமா இவரை அதிபர் ஆலோசனை குழுவில் நியமிக்கப்பட்டார்.
உலக வங்கி, ஐஎம்எப்
பொதுவாக உலக வங்கியின் தலைவர் அமெரிக்கராகவும், சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் ஐரோப்பியரை நியமிப்பது தான் வழக்கம். அஜய் பங்கா நியமனம் உறுதியாகும் பட்சத்தில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகிய இரண்டு சர்வதேச நிதி நிறுவனங்களில் தலைமை தாங்கும் முதல் இந்திய-அமெரிக்கர் மற்றும் சீக்கிய-அமெரிக்கர் என்ற பெருமையை அஜய் பங்கா பெறுவார்.
மாஸ்டர்கார்டு பயணம்
உலகளவில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு சேவை அளிக்கும் மாபெரும் மாஸ்டர்கார்டு நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி தான் அஜய் பங்கா. சொல்லப்போனால் பார்சூன் 500 நிறுவனத்தின் பல நிறுவனங்களில் இந்தியர்கள் சிஇஓ-வாக இருந்தாலும், அனைத்திற்கும் முன்னோடி அஜய் பங்கா தான்.
ஜெனரல் அட்லாண்டிக்
இந்திய-அமெரிக்கரான அஜய் பங்கா-விற்குத் தற்போது 63 வயதாகிறது. மாஸ்டர்கார்டு நிறுவனத்தை விட்டு மொத்தமாக வெளியேறிய நிலையில் தற்போது உலகின் முன்னணி முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றான ஜெனரல் அட்லாண்டிக் என்ற ஈக்விட்டி முதலீட்டு நிறுவனத்தில் துணைத் தலைவராகப் பணியாற்றுகிறார்.


Click it and Unblock the Notifications