வேதாந்தா ரிசோர்சஸ் குழுமத்தின் துணை தலைமை நிதி அதிகாரியாக இருந்த அஜய் கோயல் அந்நிறுவனத்தை விட்டு வெளியேறி, edtech நிறுவனமான பைஜூஸில் CFO ஆக பதவியேற்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
அஜய் கோயல் வேதாந்தா நிறுவனத்தில் சேரும் முன் டியாஜியோ, ஜிஇ (ஜெனரல் எலக்ட்ரிக்), கோகோ கோலா மற்றும் நெஸ்லே ஆகிய நிறுவனங்களில் முக்கிய பதவியை வகித்துள்ளார்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
வேதாந்தா நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அஜய் கடந்த மாதம் நிறுவனத்திலிருந்து தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார் எனவும், அவரின் ராஜினாமா ஏப்ரல் 9 முதல் அமலுக்கு வரும் எனவும் வேதந்தா நிறுவனம் பங்கு சந்தைக்கு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பைஜூஸ்!
இந்நிலையில் பைஜூவின் முந்தைய CFO ஆக இருந்த பிவி ராவ் டிசம்பர் 2021 இல் பதவியை ராஜினாமா செய்தார். அதனையடுத்து 16 மாதங்கள் கழித்து அஜய் கோயல் அப்பதவியை நிரப்ப உள்ளார். இன்னும் நிதியறிக்கை தாக்கல் செய்யவில்லை!
இதில் ஆச்சரியம் என்னவென்றால், பைஜூஸ் நிறுவனம் அதன் 2022 நிதியாண்டிற்கான நிதியறிக்கையை இன்னும் தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் புதிதாக CFO பதிவியில் சேரவிருக்கும் அஜய் கோயல் மீது அபரிமிதமான நம்பிக்கையை நிறுவனம் கொண்டுள்ளது.
நஷ்டத்தில் இயங்கும் பைஜூஸ்!
பைஜூஸ் FY21 (2020-21) நிதியாண்டு முடிந்து கிட்டத்தட்ட 18 மாதங்களுக்குப் பிறகு அதன் முடிவுகளை தாக்கல் செய்தது மற்றும் அதன் நிகர வருவாயில் நஷ்டத்தையும் பதிவு செய்தது. இந்நிலையில் ஒழுங்குமுறை ஆணையத்திற்கு இணக்கமாக, தனியார் நிறுவனங்கள் தங்கள் ஆண்டு முடிவுகளை MCA க்கு அந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் பைஜூஸ் நிறுவனம் அதன் 2022 நிதியாண்டிற்கான வருவாய் அறிக்கையை இன்னும் தாக்கல் செய்யாமல் உள்ளது.
பங்குகள் குறைப்பு!
உலகின் மிகப்பெரிய சொத்து மேலாளர் நிறுவனமான BlackRock, ஒட்டுமொத்த தொழில்நுட்பத் துறையில் உள்ள அழுத்தத்தைக் குறிக்கும் வகையில் பைஜூஸ் நிறுவனத்தில் உள்ள 11 பில்லியனுக்கும் டாலருக்கும் அதிகமாக உள்ள பங்குகளின் மதிப்பை கிட்டத்தட்ட 50% குறைத்துள்ளது. அதனையடுத்து நிறுவனம் கடும் சரிவை சந்தித்து வருகிறது.
அஜய் கோயல் பொறுப்பு!
இந்நிலையில் பைஜூஸ் நிறுவனம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவும் கஷ்டப்பட்டு வரும் நிலையில் புதிதாக பொறுப்பேற்க உள்ள அஜய் கோயல் மிது அதீத நம்பிக்கையை நிறுவனம் வைத்துள்ளது எனவும், அவர் நிறுவனத்தின் தலைவர்களான பைஜூ நவீந்திரன் மற்றும் திவ்யா கோகுல்நாத் உட்பட முக்கிய அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றுவார் என நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications