இந்தியாவின் தொழில் குழுமங்களில் கவனிக்கத்தக்கது பிராமல் குழுமம். தற்போது ரியல் எஸ்டேட், ஃபைனான்ஸ், மருந்து என இவர்கள் கால்பதித்த துறையில் எல்லாமே ஜாக்பாட் அடித்துள்ளனர். இதன் பின்னணியில் இருக்கும் அஜய் பிராமல் குறித்து தான் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம். இவர் முகேஷ் அம்பானியின் சம்மந்தி ஆவார், ஈஷா அம்பானியின் மாமனார் தான் இந்த அஜய் பிராமல்.
அஜய் பிராமலுக்கு 24 வயதான போது அவரது தந்தை திடீரென இறந்துவிடுகிறார். எனவே சகோதரர்களுடன் இணைந்து குடும்பத் தொழிலான ஆடை தொழிலில் இறங்கினார். மொரார்ஜி டெக்ஸ்டைல் மில்ஸ் என்ற பெயரில் தந்தை நடத்தி வந்த மில்லை தனது அண்ணனுடன் இணைந்து நடத்த தொடங்கினார்.

ஆனால் அடுத்த சில ஆண்டுகளிலேயே அண்ணனும் புற்றுநோயால் இறந்துவிட அஜய் பிராமலுக்கு தன்னுடைய குடும்பம் தனது சகோதரரின் குடும்பம் என மிகப்பெரிய குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டது .
அப்பொழுது தான் தந்தையின் ஆடை தொழில் நமக்கு ஒத்து வராது என முடிவெடுத்த அவர் புது தொழில்களில் களமிறங்க முடிவெடுத்தார். அப்படி 1984 ஆம் ஆண்டில் தொடங்கியது தான் பிராமல் குழுமம். இந்த குழுமத்தின் நோக்கம் நிறுவனங்களை ஏற்கனவே செயல்படும் நிறுவனங்களை கையகப்படுத்தி அவற்றை அதிக அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதாகும்.
இதன்படி குஜராத் கிளாஸ் லிமிடெட் நிறுவனத்தை வாங்கினார். இந்த நிறுவனம் மருந்து மற்றும் காஸ்மெட்டிக் பொருட்களுக்கு தேவையான கண்ணாடி பாட்டில்களை தயாரித்து வந்தது. இந்த நிறுவனத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றார் . அஜய் பிராமல் மூலம் ஒரு ஆண்டிலேயே இந்த நிறுவனம் 5 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் நிறுவனமாக மாறியது.
பின்னர் 1988ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவை சேர்ந்த நிக்கோலஸ் மருந்து நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது. அந்த சமயத்தில் அஜய் பிராமல், நிக்கோலஸ் லேப் லிமிட்டெட் நிறுவனத்தை வாங்கினார் . அதனை பிராமல் ஹெல்த் கேர் என பெயர் மாற்றம் செய்தார். 1991 ஆம் ஆண்டு பிராமில் மத்திய பிரதேச மாநிலம் பீதாம்பூரில் மருந்து உற்பத்தி ஆலையை நிறுவினார்.
இதனை அடுத்து பல்வேறு நாடுகளுக்கும் மருந்துகளை விற்பனை செய்வதில் கவனம் செலுத்தினார். இதன் மூலம் அடுத்த பத்து ஆண்டுகளில் இந்த நிறுவனம் ஆண்டுக்கு 440 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் நிறுவனமாக உயர்ந்தது. இதனை அடுத்து பல்வேறு மருந்து நிறுவனங்களை கையகப்படுத்தும் பணிகளில் இறங்கினார் அஜய் பிராமல்.
இந்தியாவின் முன்னணி மருந்து நிறுவனமாக பிராமல் ஹெல்த் கேர் மாறியது. பின்னர் 2010 ஆம் ஆண்டில் சர்வதேச மருந்து நிறுவனமான ஏபோட் லேப், பிராமல் நிறுவனத்தை 17,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விலைக்கு வாங்கியது. இந்த விற்பனையின் மூலம் அஜய் பிராமலுக்கு கணிசமான தொகை கிடைத்தது.
ஆனால் அத்துடன் அவர் ஓய்வெடுக்க விரும்பவில்லை.
2011 ஆம் ஆண்டில் பிராமல் ரியாலிட்டி என்ற நிறுவனம் உருவானது. இந்த நிறுவனம் மும்பையில் கணிசமான சொத்துக்களை கையகப்படுத்தி அவற்றை விற்பனை செய்து பல ஆயிரம் கோடி ரூபாய் லாபம் பார்த்தது. எனவே பல்வேறு தனியார் முதலீட்டு நிறுவனங்களும் பிராமல் ரியாலிட்டி நிறுவனத்தில் சுமார் 20700 கோடி முதலீடு செய்தன. இந்தியாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனம் என பிராமல் ரியாலிட்டி நிறுவனம் பெயர் பெற்றது.
தற்போது பிராமல் குழுமம், ரியல் எஸ்டேட், பைனான்ஸ், மருந்து என பல்வேறு துறைகளிலும் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் வருமானம் ஆண்டுக்கு 14 , 710 கோடி ரூபாய் ஆகும். இதன் லாபம் ஆண்டுக்கு 1,923 கோடி ஆகும். அஜய் பிராமல் இந்தியாவின் 56ஆவது பணக்காரராக இருக்கிறார். அவரது சொத்து மதிப்பு 26 ,560 கோடி ரூபாய் ஆகும் . அதுமட்டுமின்றி பிராமல் அறக்கட்டளை மூலம் 27 மாநிலங்களை சேர்ந்த சுமார் 11 கோடி மக்களுக்கு சுகாதாரம், படிப்பு உள்ளிட்டவற்றுக்கு தேவையான நிதி உதவிகளை செய்கிறது.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!



Click it and Unblock the Notifications