ரிலையன்ஸ் இண்டஸ்டரீஸ் குழுமத்தின் டிஜிட்டல் வர்த்தகத்தின் முதல் படியாக இருந்த AJIO தளம் போட்டி மிகுந்த ஆன்லைன பேஷன் வர்த்தகச் சந்தையில் 2016 லேக்மி பேஷன் வீக்-ல் அறிமுகம் செய்யப்பட்டது. ஏற்கனவே ஆன்லைன் பேஷன் சந்தையில் பிளிப்கார்ட், மிந்திரா, அமேசான், ஸ்னாப்டீல் போன்ற பல நிறுவனங்கள் இருக்கும் நிலையில் ரிலையன்ஸ் இத்துறையில் வெற்றி பெற முடியாது எனக் கூறப்பட்டது.
2019 முன்பு வரையில் இந்தியாவின் முன்னணி ஆன்லைன் பேஷன் வர்த்தகர்கள் பட்டியலில் ஜியோ இல்லாமல் இருந்த நிலையில், தற்போது பிளிப்கார்ட்-ன் பிரத்தியேக பேஷன் ரீடைல் நிறுவனமான மிந்திராவை ஓரம்கட்டி முன்னேறியுள்ளது.
AJIO-வின் இந்த அதிரடி வளர்ச்சியால் பிளிப்கார்ட் மட்டும் அல்லாமல் அமேசான் நிறுவனமும் அதிர்ச்சி அடைந்துள்ளது. பிளிப்கார்ட் நிறுவனத்திற்குப் போட்டியாக அமேசானும் தனது பேஷன் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் பணியில் இறங்கியுள்ள நிலையில் ரிலையன்ஸ்-ன் AJIO பிரமிக்க வைக்கும் வெற்றி இத்துறை நிறுவனங்களை மிரட்டியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
4 மடங்கு வளர்ச்சி
கொரோனா காலத்தில் ரீடைல் வர்த்தகம் கடுமையாகப் பாதித்த நிலையில், கடந்த சில மாதங்களாகப் புதிய வாடிக்கையாளர்கள் வருகையின் காரணமாக ஈகாமர்ஸ் நிறுவனங்கள் சிறப்பான வர்த்தகத்தைப் பெற்று வருகிறது.
இந்நிலையில், கொரோனாவுக்கு முன்பு இருந்து வர்த்தக அளவீட்டை விடவும் AJIO 4 மடங்கு அதிக வளர்ச்சியை அடைந்துள்ளது. AJIO தளத்தில் வரும் ஆர்டர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
வாடிக்கையாளர் எண்ணிக்கை
2019க்குப் பின் AJIO தளத்திற்கு வரும் வாடிக்கையாளர் எண்ணிக்கை 2.35 கோடியாக உயர்ந்துள்ளது. இது பிளிப்கார்ட்-ன் மிந்திரா, கூவுஸ், ஸ்னாப்டீல் மற்றும் டாடா கிளிக் ஆகிய நிறுவனங்களை விடவும் அதிகமாகும்.
இதேபோல் ஆப் டவுன்லோடு எண்ணிக்கையிலும் AJIO பிற 4 நிறுவனங்களை விடவும் முன்னோடியாக உள்ளது.
ரிலையன்ஸ ரீடைல்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது ரீடைல் வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வரும் நிலையில் பேஷன் வர்த்தகப் பிரிவிற்குப் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்து வருகிறது. ஆயினும் ஆர்டர்கள் எண்ணிக்கையும், AJIO தளத்திற்கு வரும் வாடிக்கையாளர் எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
இன்றைய நிலையிலும் ரிலையன்ஸ் ரீடைல் வர்த்தகப் பிரிவில் பேஷன் மற்றும் லைப்ஸ்டைல் பொருட்களின் வர்த்தகம் வெறும் 9 சதவீதம் தான்.
2025-ல் ரிலையன்ஸ்
கோல்டுமேன் சாச்சீஸ் ஆய்வுகள் படி 2025ஆம் நிதியாண்டிற்குள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ஈகாமர்ஸ் வர்த்தகத்தின் GMV மட்டும் 35 பில்லியன் டாலராகவும், சுமார் 31 சதவீத சந்தையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
பிளிப்கார்ட் அதிர்ச்சி
ரிலையன்ஸ் பேஷன் மற்றும் லைப்ஸ்டைல் பொருட்களின் வர்த்தகம் மீது பெரிய அளவில் கவனம் செலுத்தாத இந்த நேரத்திலேயே மிந்திராவின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை விடவும் அதிகளவிலான வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. இந்நிலையில் மொத்த கவனத்தையும் பேஷன் மற்றும் லைப்ஸ்டைல் பிரிவு மீது திருப்பினால் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் பெரிய அளவிலான பாதிப்புகளை எதிர்கொள்ளும்.
இந்திய ஆன்லைன் பேஷன் ரீடைல் சந்தையில் பிளிப்கார்ட் மற்றும் மிந்திரா ஆகிய இரு நிறுவனங்கள் சுமார் 60 சதவீத சந்தையைக் கொண்டுள்ளதாகப் பாங்க் ஆஃப் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications