பெங்களூரு: பெங்களூருவில் பில்லினியர்கள் தெருவில் 67.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை வாங்கி இருக்கிறார் தொழிலதிபர் அஜித் ஐசக்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் லாவெல்லே ரோடு, சதாசிவ நகர் மற்றும் கோரமங்கலா ஆகிய இடங்கள் பெரும் பணக்காரர்களும் தொழிலதிபர்களும் வசிக்கும் இடமாக இருக்கிறது. இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்களும் , பணக்காரர்களும் இந்த பகுதிகளில் தான் வசிக்கின்றனர். இங்கே ஒரு இடத்தை வாங்குவது என்பது மிகப்பெரிய விஷயமாக கருதப்படுகிறது.

பிரபல தொழிலதிபர் அஜித் ஐசக், கோரமங்கலாவில் உள்ள பில்லினியர் தெருவில் 67.5 கோடி மதிப்புள்ள சொத்தை வாங்கியுள்ளார். இது தான் தற்போது பெங்களூரு முழுவதும் பேசு பொருளாக மாறி இருக்கிறது.
சர்வதேச அளவிலான தொழில்நுட்ப நிறுவனமான குவெஸ் கார்ப்-இன் தலைவர் அஜித் ஐசக். இவரது நிறுவனம் ஒன்பது நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இவரது நிறுவனத்தில் சுமார் 5 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர்.
சென்னை லயோலா கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்த அஜித் ஐசக் கடந்த 2007 ஆம் ஆண்டு குவெஸ் கார்ப் நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் கிட்டத்தட்ட 15 ஆண்டு காலமாக பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. கோத்ரேஜ், எஸ்ஸார் குரூப் போன்ற நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்து வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் மற்றும் சேல்ஸ், மார்க்கெட்டிங், டெலிகாம் மற்றும் செக்யூரிட்டி மேனேஜ்மென்ட் உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது. இதனால் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள அஜித் ஐசக், 2021 ஆம் ஆண்டு கோரமங்கலா பகுதியில் 52 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு பங்களாவை வாங்கினார்.
அஜித் ஐசக் நன்கொடை வழங்குவதிலும் புகழ்பெற்ற நபராக இருக்கிறார். இவர் 2022 ஆம் ஆண்டு இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸுக்கு 105 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கினார்.
தற்போது அஜித் ஐசக் பெங்களூருவில் பில்லினியர்ஸ் தெருவில் சுமார் 10,000 சதுர அடிக்கு ஒரு இடத்தை வாங்கி இருக்கிறார். இதன் மதிப்பு 67.5 கோடி ஆகும். இதன் ஒரு சதுர அடி விலையானது 70,000 ரூபாய் என தெரியவந்துள்ளது. இதற்கு முன்பு ஒரு சதுர அடி 68,000 ரூபாய்க்கு வாங்கியது தான் பெங்களூருவில் அதிக விலைக்கு நடந்த ரியல் எஸ்டேட் வர்த்தகமாக இருந்தது.
அஜித் ஐசக் தற்போது இடம் வாங்கி இருக்கும் பகுதியில் தான் பிளிப்கார்ட் நிறுவனர் சச்சின் பன்சால் இருக்கிறார். அவரது இருப்பிடத்தின் மதிப்பு 45 கோடி ஆகும். அதே போல இன்போசிஸ் துணை நிறுவனர்கள் நந்தன் நீலகேனி, கிரிஷ் கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் இதே பகுதியில் தான் குடியிருக்கின்றனர்.
story written by: Devika
More From GoodReturns

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications