Meta இந்திய தலைவர் அஜித் மோகன் திடீர் ராஜினாமா.. Snapchat-ல் முக்கியப் பதவி..!

பேஸ்புக்-ன் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் இந்திய கிளை நிறுவனத்தின் தலைவர் அஜித் மோகன் தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து அஜித் மோகன் இந்தியாவில் வளர்ச்சி அடைய வேண்டும் எனப் படு தீவிரமாக இருக்கும் மெட்டா-வின் சக போட்டி நிறுவனமான ஸ்னாப் இன்க்-ல் சேர உள்ளார்.

இதுகுறித்து அஜித் மோகன் தனது லின்கிடுன்-ல் கூறுகையில், இந்தியாவில் மெட்டாவை (பேஸ்புக்) 4 வருடங்கள் வழிநடத்திய பிறகு, நான் எனது பொறுப்பில் இருந்து விலகுகிறேன்.

அஜித் மோகன்

அஜித் மோகன்

மெட்டா நிறுவனம் உலகின் மிக முக்கியமான நாடுகளில் ஒன்றான இந்தியாவில் அதன் முயற்சிகளைச் செயல்படுத்தும், வழிநடத்தும் அற்புதமான வாய்ப்பை பெற்றதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் நாடு முழுவதும் உள்ள மக்கள், கிரியேட்டர்கள் மற்றும் வணிகங்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியதில் எண்ணுடைய டீம் மற்றும் நான் செய்த பணிக்காகப் பெருமைப்படுகிறேன்.

 4 ஆண்டுகள்

4 ஆண்டுகள்

நான் இந்தப் பொறுப்பை ஏற்றபோது, இந்தியாவின் பொருளாதார மற்றும் சமூக மாற்றத்தைத் தூண்டுவதில் மதிப்புமிக்கக் கூட்டாளியாக இருக்கும் ஒரு குழுவையும், நிறுவனத்தையும் உருவாக்குவது எனது நோக்கமாக இருந்தது. கடந்த 4 ஆண்டுகளில் இதைத்தான் நாங்கள் செய்துள்ளோம்.

Snap Inc-ல் முக்கியப் பதவி

Snap Inc-ல் முக்கியப் பதவி

மெட்டா நிறுவனத்தைத் தொடர்ந்து நான் Snap Inc-ன் ஆசிய பசிபிக் பிராந்தியத்தை வழிநடத்தப் போகிறேன் மற்றும் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் ஒரு பகுதியாக இருக்கப் போகிறேன் என்பதைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று அஜித் மோகன் தனது லின்கிடுன் பதிவில் கூறியிருந்தார்.

 ஹாட்ஸ்டார் டூ மெட்டா

ஹாட்ஸ்டார் டூ மெட்டா

அஜித் மோகன் ஹாட்ஸ்டார்-ல் இருந்து 2019 இல் மெட்டா-வில் (அப்போது பேஸ்புக்) சேர்ந்தார், மேலும் இந்தச் சமூக ஊடக நிறுவனத்திற்கான இந்திய வணிகத்தின் துணைத் தலைவராகவும் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றினார். அஜித் மோகன் ஹாட்ஸ்டார்-ல் இருந்து 2019 இல் மெட்டா-வில் (அப்போது பேஸ்புக்) சேர்ந்தார், மேலும் இந்தச் சமூக ஊடக நிறுவனத்திற்கான இந்திய வணிகத்தின் துணைத் தலைவராகவும் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றினார்.

Snap Inc திட்டம்

Snap Inc திட்டம்

Snap Inc தற்போது நாட்டின் 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் தனது சேவை மற்றும் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முயற்சி செய்கிறது. தற்போது சந்தை வர்த்தகத்தில் இதைச் செய்யக் கட்டாயம் இந்திய சந்தை குறித்து நன்கு தெரிந்த ஒருவர் தேவை என்பதாலேயே அஜித் மோகன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

200 மில்லியன் வாடிக்கையாளர்கள்

200 மில்லியன் வாடிக்கையாளர்கள்

அஜித் மோகன் தலைமையில் மெட்டா குடும்பச் சேவைகளான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் ஆகிய தளத்தில் 200 மில்லியன் வாடிக்கையாளர்களை இணைத்துள்ளார். இது மட்டும் அல்லாமல் இந்திய வர்த்தகத்தின் வருவாய் பெரிய அளவில் விரிவாக்கம் அடைந்துள்ளது.

மெட்டா பங்குகள்

மெட்டா பங்குகள்

மெட்டா பங்குகள் 2022 ஆம் ஆண்டில் மட்டும் 73.61 சதவீதம் வரையில் சரிந்து 89.33 ரூபாயாக உள்ளது. பார்சூன் 500 நிறுவனங்களில் அதிகம் பாதிக்கப்பட்ட நிறுவனங்களில் மெட்டா முக்கியமான நிறுவனமாக உள்ளது. இதேவேளையில் மெட்டா நிறுவனத்தின் சந்தை மதிப்பு மற்றும் மார்க் ஜூக்கர்பெர்க் சொத்து மதிப்பு பெரிய அளவில் சரிந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+