மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக இருக்கும் அஜித் பவார் இன்று காலை விமான விபத்தில் உயிரிழந்தது, அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற அஜித் பவார் பாராமதி விமான நிலையத்தில் அவர் பயணித்த பிரைவேட் ஜெட் விமானத்தை அவசரமாக தரையிறங்க முயன்றபோது விமானம் கட்டுப்பாட்டை இழந்து ரன்வேயிலிருந்து விலகி சென்று தீப்பிடித்து வெடித்தது. விபத்தில் அஜித் பவார் உட்பட விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்.

ஒருபக்கம் அரசியல் தலைவர்களும், அஜித் பவார் குடும்பத்தினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துக்கொண்டு இருக்கும் வேளையில், விபத்தின் முழு காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அஜித் பவார் பாராமதியில் நடைபெறும் ஜில்லா பரிஷத் தேர்தல்களை முன்னிட்டு பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ள சென்று கொண்டிருந்தார். அவரது நிகழ்ச்சி அட்டவணையில் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை நான்கு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டிருந்தன. பாராமதி அவரது சொந்த ஊர் என்பதால், தேர்தல் பிரச்சாரத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்திருந்தார். இந்த விபத்தால் அவரது அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அஜித் பவார் மகாராஷ்டிராவின் மிக முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார். 2024 சட்டமன்றத் தேர்தலுக்காக அஜித் பவார் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் அவர் அறிவித்த சொத்து மதிப்பு சுமார் ரூ.103.16 கோடி. மொத்த சொத்துகள் ரூ.124.55 கோடியாகவும், கடன்கள் ரூ.21.4 கோடியாகவும் உள்ளன.
இதில் அசையா சொத்துகள் ரூ.37 கோடிக்கு மேலும், அசையும் சொத்துகள் ரூ.8 கோடிக்கு மேலும் இருந்தன. இதோடு வீடுகள், விவசாய நிலங்கள், முதலீடுகள், டொயோட்டா கேம்ரி, ஹோண்டா CR-V போன்ற சொகுசு வாகனங்கள் ஆகியவை அவரது சொத்துகளில் அடங்கும்.
இந்த துயர சம்பவம் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஜித் பவாரின் மறைவு அம்மாநில அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. மக்கள் மற்றும் கட்சி தொண்டர்களிடையே ஆழ்ந்த துக்கம் நிலவுகிறது.
மகாராஷ்டிராவில் இப்போது பாஜக-வின் என்டிஏ கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. பட்னாவிஸ் முதல்வராக இருக்கும் நிலையில், ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வராக உள்ளனர். அஜித் பவாரின் மறைவை தொடர்ந்து 2வது துணை முதல்வர் பதவி யாருக்கு கிடைக்கும். இதேபோல் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) தலைவர் பதவி யாருக்கு செல்லும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications