மகாராஷ்டிரா துணை முதலமைச்சரான அஜித் பவார் இன்று காலை விமான விபத்தில் உயிரிழந்தது இம்மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது Learjet 45 விமானம் கட்டுப்பாட்டை இழந்து ரன்வேயிலிருந்து விலகி சென்று தீப்பிடித்து வெடித்தது. விமானத்தில் அஜித் பவார் உட்பட ஐந்து பேர் பயணித்தனர். இதில் இரண்டு விமானிகள், ஒரு பாதுகாப்பு அதிகாரி மற்றும் ஒரு உதவியாளர் அடங்குவர். DGCA அதிகாரப்பூர்வமாக அனைவரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியது.
அஜித் பவார் பயணித்த விமானம் VT-SSK என்ற பதிவு எண் கொண்டது. இது VSR Ventures Pvt Ltd நிறுவனத்தால் இயக்கப்பட்டது. இந்நிறுவனம் டெல்லியில் பதிவு செய்யப்பட்டு, மும்பை, போபால், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் செயல்படுகிறது.

இந்த விமானம் மும்பையிலிருந்து காலை 8.10 மணிக்கு புறப்பட்டு, பாராமதிக்கு ஜில்லா பரிஷத் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்றது. அஜித் பவார் அங்கு நான்கு பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ள திட்டமிட்டிருந்தார். இந்த விபத்து காரணமாக நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இது VSR Ventures நிறுவனத்தின் கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டாவது பெரிய விபத்து ஆகும். 2023 செப்டம்பர் 14 அன்று அதே Learjet 45 XR விமானம் (VT-DBL) மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ரன்வேயிலிருந்து விலகி சென்றது. அப்போது விசாகப்பட்டினத்திலிருந்து வந்த விமானம் கனமழை மற்றும் குறைந்த பார்வை காரணமாக விபத்துக்குள்ளானது. அந்த சம்பவத்தில் உயிரிழப்பு இல்லை என்றாலும், விமானம் பெரிதும் சேதமடைந்தது.

அஜித் பவார் விமானம் விபத்துக்குள்ளான நிலையில் VSR ஏவியேஷன் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் முடங்கிய நிலையில் உள்ளது. இந்நிறுவனம் தனியார் ஜெட் சார்ட்டர், லீசிங், ஏர் அம்புலன்ஸ் சேவைகளை வழங்கி வருகிறது.
இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் பட்டியலில் ஹேவெல்ஸ் இந்தியா, வெல்ஸ்பன், ஏபிஎல் அப்போலோ போன்ற நிறுவனங்கள் உள்ளன. நிறுவனத்தின் உரிமையாளர் விஜய் குமார் சிங் ஆவார்.
Learjet 45XR ஒரு மிட்சைஸ் பிசினஸ் ஜெட் ஆகும். இது வேகமான பயணத்திற்கு ஏற்ற விமானமாகும், மேலும் இது 9 பேர் வரை அமரக்கூடியது. இந்த விபத்து மகாராஷ்டிரா அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஜித் பவாரின் மறைவு அம்மாநில அரசியலை பெரிய அளவில் பாதித்துள்ளது.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications