மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி எதிர்பாராத விதமாக அவர் உயிரிழந்து விட்டார். நாடு முழுவதுமே இந்த விபத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. துணை முதலமைச்சர் பயணம் செய்யும் விமானம் எப்படி விபத்துக்குள்ளானது என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் விஎஸ்ஆர் வென்ச்சர்ஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான Learjet 45XR என்ற தனி விமானத்தில் பயணம் செய்தார். காலை மும்பை விமான நிலையத்தில் இருந்து இந்த விமானம் புறப்பட்டது. விமானத்தில் அஜித் பவார் அவரது பாதுகாப்பு அதிகாரி மற்றும் உதவியாளர் ஆகியோரும் இரண்டு விமானிகளும் இருந்தனர்.

அஜித் பவார் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தான் தனி விமானத்தில் பாராமதி நகருக்கு சென்று கொண்டிருந்தார். விமானம் பாராமரி விமான நிலையத்தில் தரையிறங்கும் போது தான் விபத்து நேரிட்டது. இந்த விமான தரையிறங்கும் போது என்ன நடந்தது? என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
Flightradar24 என்ற செயலி உலகம் முழுவதும் விமானங்களின் இயக்கங்கள் தொடர்பான தகவல்களை லைவ் முறையில் வழங்குகிறது. இந்த செயலி சார்பாக அஜித் பவார் பயணம் செய்த விமானம் குறித்த தகவல்கள் எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளன. அதில் இந்த விமானம் முதல்முறை தரையிறங்கும் முயற்சி தோல்வி அடைந்த பின்னர் இரண்டாவது முறையாக தரையிறங்கும் போது விபத்து நேர்ந்தது தெரிய வந்துள்ளது.
இன்று காலையில் தனி விமானம் விபத்தில் சிக்கியதில் மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர் அஜித் பவார் மற்றும் 4 பேர் பலியாகி உள்ளனர். இந்த விமானம் பாராமதி விமான நிலையத்தில் 2வது முயற்சியாக தரையிறங்கியபோது விபத்தில் சிக்கியது என அந்த பதில் கூறப்பட்டுள்ளது. வழக்கமாக விமானங்கள் தரையிறங்கும் போது பனி மூட்டம் காரணமாக visibility சரியாக இல்லை அல்லது விமானம் இறங்க இடமில்லை, அல்லது அதே பகுதியில் வேறு விமானம் மேலே புறப்படுகிறது , இறங்குகிறது என்ற சூழல்களில் விமானம் மீண்டும் வானத்திலேயே வட்டமடித்து Clearance கிடைத்த உடன் மீண்டும் தரையிறங்கும்.
அந்த வகையில் முதன்முறையாக விமானம் தரையிறங்க முயன்று அது முடியாமல் போயுள்ளது. அதற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. பனி மூட்டமோ visibility பிரச்சினையோ இல்லை என்றே சொல்லப்படுகிறது. டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியின் படி விமானம் விபத்துக்குள்ளான 8.48 மணி அளவில் அங்கே visibility 3500 மீட்டருக்கு தெளிவாக இருந்துள்ளது.
விமானியும் அனுபவம் வாய்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது. விமானத்தை இயக்கிய சுமித் கபூர் 16,500 மணி நேரம் flying hour அனுபவம் கொண்டவராம். விமானம் இரண்டாவது முறை தரையிறங்கும் போது ஓடுபாதைக்கு சற்று அருகே இருந்த பகுதியில் மோதி தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.
விபத்தை நேரில் பார்த்தவர்கள் , விமானம் திடீரென விழுந்து வெடித்தது உடனடியாக தீப்பிடித்தது, நான்கு ஐந்து முறை விமானம் வெடித்தது எங்களால் பக்கத்தில் கூட செல்ல முடியவில்லை என கூறி இருக்கின்றனர். இந்த விமான விபத்து தொடர்பாக விசாரணை தொடங்கி இருப்பதாக விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications