தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டவருமாக இருப்பவர் நடிகர் அஜித் குமார் . தல, அல்டிமேட் ஸ்டார் என பல பெயர்களை கொண்டு ரசிகர்கள் அழைத்தாலும் எந்த பட்டப்பெயரும் எனக்கு வேண்டாம் என தொடர்ந்து கூறி வருபவர்.
33 ஆண்டுகள் திரையுலக பயணம்: அஜித்குமார் திரையுலகுக்கு வந்து 33 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது . அஜித்குமார் தனிப்பட்ட முறையில் கார் ரேஸில் தன்னுடைய ஆர்வத்திற்காகவும் பெரிய அளவில் அறியப்படுகிறார். 33 ஆண்டுகாலம் திரையுலக பயணத்தை நிறைவு செய்திருப்பது குறித்து அஜித்குமார் தரப்பில் வெளியிடப்பட்டு இருக்கக்கூடிய அறிக்கையில் சினிமா துறையில் எந்த ஒரு பின்புலமும் யாருடைய சிபாரிசு இல்லாமல் தான் நான் நுழைந்தேன், முழுக்க முழுக்க என்னுடைய சுய முயற்சியால் மட்டுமே முயற்சி செய்தேன் மீண்டு வந்தேன் தொடர்ந்து முன்னேறுகிறேன் என தெரிவித்திருக்கிறார்.

ரசிகர்களுக்கு நன்றி: காயங்கள், மீண்டு வருவது, தோல்வி மற்றும் அமைதி என வாழ்க்கை என்னை பல வழிகளில் சோதித்து இருக்கிறது என குறிப்பிட்டு இருக்கு அவர் சினிமாவில் எண்ணில் அடங்காத அளவுக்கு வெற்றியும் தோல்வியும் பார்த்து இருக்கிறேன் என குறிப்பிட்டு இருக்கிறார். ரசிகர்களின் அன்பை தவறாகவோ சுய லாபத்துக்காகவோ பயன்படுத்த மாட்டேன் என குறிப்பிட்டிருக்கும் அஜித் குமார் ரசிகர்களின் அன்பிற்கு ஆதரவுக்கும் நன்றி என கூறி இருக்கிறார்.
அஜித்குமார் சொத்து மதிப்பு: நடிகர் அஜித்குமாரின் சொத்து மதிப்பு குறித்த விவரங்களை தற்போது தெரிந்து கொள்ளலாம் . 1990 ஆம் ஆண்டு முதல் திரைத்துறையில் பயணம் செய்து வருகிறார் அஜித் குமார். இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் ஒரு நடிகராகவும் இவர் அறியப்படுகிறார். இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட தகவல் படி அஜித்குமார் ஒரு திரைப்படத்திற்கு 150 முதல் 165 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெறுகிறார்.

ஆடம்பர பங்களா: இது தவிர அஜித்குமார் தொழில் முறை கார் பந்தய வீரராகவும் இருந்து வருகிறார். தனக்கென ஒரு குழுவை அமைத்து பல்வேறு கார் பந்தயங்களிலும் கலந்து கொள்கிறார். இதிலும் அவருக்கு பரிசு தொகை கிடைக்கிறது. சென்னை திருவான்மியூர் பகுதியில் அஜித் குமாருக்கு சொந்தமாக ஒரு மிகப்பெரிய ஆடம்பர குடியிருப்பு இருக்கிறது. நோ புரோக்கர் வெளியிடும் தகவலின்படி இந்த வீட்டின் மதிப்பு 15 கோடி ரூபாய் வரை இருக்கும் என சொல்லப்படுகிறது.
பிரைவேட் ஜெட்: கடற்கரை தென்படும்படி கட்டப்பட்டுள்ள இந்த குடியிருப்பில் உயர்தரமான உடற்பயிற்சி மையம் , நீச்சல் குளம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது . அஜித்குமாரை பொறுத்தவரை 350 கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்ட நபராக இருக்கிறார் . இவர் தனக்கென சொந்தமாக பல்வேறு ஆடம்பர கார்கள் மற்றும் பைக்குகளை கொண்டிருக்கிறார் . சொந்தமாக பிரைவேட் ஜெட் கொண்ட நடிகராக இருக்கிறார் .இவர் வைத்திருக்கும் பிரைவேட் ஜெட்டின் மதிப்பு 25 கோடி ரூபாய் இருக்கும் என ரேடியோ சிட்டி வெளியிடும் தகவல் குறிப்பிடுகிறது.

ஆடம்பர கார்கள்: BMW S1000 RR, Aprilia Caponord, BMW K1300 ஆகிய ஆடம்பர பைக்குகளையும், Lamborghini , BMW 7 ஆகிய ஆடம்பர கார்களையும் கொண்டிருக்கிறார். அஜித்குமார் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.


Click it and Unblock the Notifications