தமிழ் திரையுலகில் கோடிக்கணக்கான ரசிகர்களையும், யாரும் எட்ட முடியாத சாதனைகளையும் படைத்த முன்னணி நடிகரான அஜித் குமார், தற்போது கார் ரேசிங்-கில் தனக்கான இடத்தை தேடிப்பிடிக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். இதற்காக அஜித் குமார் கடந்த ஆண்டு முதல் கார் ரேசிங்கில் தீவிரமாக ஈடுபாடு காட்டி வருகிறார்.
2024ல் அவர் தொடங்கிய அஜித் குமார் ரேசிங் அணி, துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற சர்வதேச பந்தயங்களில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளது. இந்த அணி, 2025 க்ரெவென்டிக் 24 மணி நேர ஐரோப்பிய எண்டூரன்ஸ் சாம்பியன்ஷிப்பில் மூன்றாவது இடத்தைப் பிடித்து உலக அளவில் கவனம் ஈர்த்தது.

இந்த நிலையில் அஜித் குமார் முயற்சிக்கு அடுத்த ஜாக்பாட் ஆக முகேஷ் அம்பானி மற்றும் ஈஷா அம்பானி தலைமையில் இயங்கும் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் லிமிடெட் (ஆர்சிபிஎல்) நிறுவனம், அஜித் குமார் ரேசிங் அணியுடன் முக்கிய கூட்டணியை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது இந்திய மோட்டார்ஸ்போர்ட்ஸை உலக அரங்கில் உயர்த்தும் முக்கிய கூட்டணி முயற்சியாக பார்க்கப்படுகிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் FMCG பிரிவான ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் நிறுவனம், அஜித் குமார் ரேசிங் அணியின் அதிகாரப்பூர்வ எனர்ஜி பார்ட்னராக கேம்பா எனர்ஜி குளிர்பானத்தை அறிவித்துள்ளது.
புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்த கூட்டணி இரு பிராண்டுகளுக்கும் உலகளாவிய அங்கீகாரத்தை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளு. கேம்பா, மலிவு விலையில் உயர்தர குளிர்பானங்களை தயாரிப்பது மட்டும் அல்லாமல் எனர்ஜி டிரிங்க் பிரிவிலும் உள்ளது. இந்த பிராண்டை விளையாட்டு அணிகள் மூலம் மக்களுக்கு கொண்டு செல்லும் விதமாக Campa Energy பிராண்ட் தற்போது அஜித் குமார் ரேசிங் அணியின் எனர்ஜி பார்ட்னராக மாறியுள்ளது.
2024ல் தொடங்கப்பட்ட அஜித் குமார் ரேசிங் அணி, சர்வதேச போட்டிகளில் விரைவாக இடம் பிடித்து பிரபலம் அடைந்துள்ளது. இந்த விரைவான பிரபலத்திற்கு பின் அஜித் குமார் இருந்தாலும், ரேசிங் டீம் துவங்கி 2 வருடங்களிலேயே குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை இந்த துவக்க அணி கண்டுள்ளது பாராட்டத்தக்கது.
ஐரோப்பிய எண்டூரன்ஸ் சாம்பியன்ஷிப்பில் மூன்றாவது இடம் பெற்றது, அஜித் குமார் ரேசிங் அணியில் மகுடமாகும். இந்த முகேஷ் அம்பானி நிறுவனத்துடனான கூட்டணி, அஜித் குமார் ரேசிங் அணிக்கு முக்கிய போட்டிகளுக்கு தேவையான வசதிகளை வழங்க உள்ளது. அஜித் குமார், நடிகராக மட்டுமல்லாமல் ரேசராகவும் தனது முயற்சியில் வெற்றி கண்டு வருகிறார், இவருடைய பாதையில் தற்போது முகேஷ் அம்பானியும் இணைந்துள்ளார்.
இந்த கூட்டணி, இந்திய மோட்டார்ஸ்போர்ட்ஸை சர்வதேச அளவில் மேம்படுத்தும் ஒரு படியாகவும் பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications