மும்பை: தனலட்சுமி வங்கியின் புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக (MD & CEO) அஜித் குமார் கே.கே. என்பவரை நியமித்தது இவ்வங்கியின் நிர்வாகம். இந்நிலையில் அஜித் குமாரின் நியமனத்தை ரிசர்வ் வங்கி (RBI) ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவர் தனலட்சுமி வங்கியை வழிநடத்துவார். இதற்கு முன்னதாக ஜே.கே. ஷிவன் அவர்கள் இப்பதவியில் இருந்தார்.

ஃபெடரல் வங்கியில் தற்போது தலைமை மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக (chief human resources officer) பணியாற்றி வரும் கே.கே. அஜித் குமார்-க்கு வங்கித் துறையில் 36 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளது.
கடன் வழங்குதல், மனிதவள மேம்பாடு, வியாபார மேம்பாடு மற்றும் கிளை வங்கி மேலாண்மை என பல்வேறு துறைகளில் இவர் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.
ஜே.கே.ஷிவன் அவர்களது பதவிக்காலம் ஜனவரி 29, 2024 அன்று முடிவடைந்தது. எனினும், புதிய தலைமை செயல் அதிகாரி பொறுப்பேற்கும் வரை நீங்கள் தொடர்ந்து பணியாற்றுமாறு ரிசர்வ் வங்கி அவரிடம் கேட்டுக் கொண்டது. அதன்படி, அவர் தற்போது வரை பதவியில் நீடித்து வருகிறார்.
தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வரும் முன்னணி தனியார் துறை வங்கிகளில் ஒன்றாக தனலட்சுமி வங்கி திகழ்ந்து வருகிறது. கேரள மாநிலம், திருச்சூரை தலைமையிடமாகக் கொண்டு 1927 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த வங்கி, 97 ஆண்டுகால சிறப்பான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது.
தற்போது, இந்தியா முழுவதும் 261 கிளைகளையும், 282 ஏடிஎம்/சிடிஎம் (ATM/CDM) களையும் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவை வழங்கி வருகிறது.
வங்கித் துறையில் நீண்ட அனுபவம் கொண்ட அஜித் குமார் கே.கே. அவர்களது தலைமையில் தனலட்சுமி வங்கி எவ்வாறு செயல்படும் என்பது குறித்து வாடிக்கையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. புதிய தொழில்நுட்பங்களை கடைப்பிடிப்பது, வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவது போன்ற துறைகளில் இவர் கவனம் செலுத்துவார் எனத் தெரிகிறது.
கே.கே.அஜித் குமார் நியமனத்தைத் தொடர்ந்து, தனலட்சுமி வங்கியின் பங்குகள் வெள்ளிக்கிழமை அன்று 1.37 சதவீத உயர்வுடன் ₹44.40க்கு மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகத்தை முடித்தன.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications