ஏழு வயதில் ஒழுங்காக எழுதப் படிக்கத் தெரிந்தாலே பெரிய விஷயம் ஆகும். அதிலும் அறிவியல், கணிதம் என வேறுபாடு பார்த்து அறிந்து கொள்வது அதைவிட பெரிய விஷயம் ஆகும். ஆனால் உலகில் சில விதிவிலக்கான திறமையான குழந்தைகளும் உள்ளனர்.
அவர்களில் ஒருவர் அக்ரித் பிரன் ஜெய்ஸ்வால், இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த இந்த சிறுவன், 7 வயதில் அறுவை சிகிச்சை செய்தான். இதனால் உலகின் இளைய அறுவை சிகிச்சை நிபுணர் என்று முத்திரை குத்தப்பட்டார். 1993ல் பிறந்த இவருக்கு தற்போது 31 வயதாகிறது.

பிறந்து 10 மாத்தில், அக்ரித் நடப்பது, பேசுவது போன்றவற்றை சர்வ சாதராணமாக செய்துள்ளான். இரண்டு வயது இருந்தபோது எழுதப் படிக்கத் தொடங்கினான். 5 வயதிலேயே ஆங்கில கிளாசிக்ஸைப் படித்து, ஏழு வயதில் தனது அற்புதமான சாதனையால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினான். 5 வயதில் பள்ளியில் அனுமதிக்கப்பட்ட அக்ரித் அடுத்த ஆண்டிலேயே சக மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் கணிதத்தில் பாடம் எடுக்கத் தொடங்கி விட்டார்.
இமாச்சலப் பிரதேச மாநிலம் நூர்பூரைச் சேர்ந்த அக்ரித் பிரான் ஜெய்ஸ்வால், தீக்காயம் அடைந்த 8 வயது சிறுமியின் கைகளில் அறுவை சிகிச்சை செய்து தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார். 12 வயதில், அந்த அதிசயக் குழந்தை தேசத்தின் "இளைய பல்கலைக்கழக மாணவர்" ஆனபோது மீண்டும் ஒருமுறை தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார்.
13 வயதில், அவர் தனது வயதில் மிக உயர்ந்த IQ (146)வைக் கொண்டிருந்தார். அக்ரித் ஜெய்ஸ்வாலின் குழந்தைப் பருவத்தில் செய்யப்பட்ட அசாதாரண செயல்கள் அவருக்கு சர்வதேசப் புகழைப் பெற்றுத் தந்தது.
அவர் புகழ்பெற்ற ஓப்ரா வின்ஃபிரே தொகுத்து வழங்கிய உலகப் புகழ்பெற்ற பேச்சு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அக்ரித் புற்றுநோய்க்கான மருந்தைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்தினார்.
இந்தியாவில் ஏராளமான புற்றுநோயாளிகளின் அவல நிலையைக் கவனித்த பிறகு அவர் உருவாக்கிய மன உறுதி இது. ஓப்ரா வின்ஃபிரே நிகழ்ச்சியில், மரபணு சிகிச்சை தனது புற்றுநோய் ஆராய்ச்சிக்கு சரியான அடிப்படையை உருவாக்குகிறது என்று குறிப்பிட்டார்.
அக்ரித் தனது ஆரம்ப காலத்திலிருந்தே, புற்று நோயைக் கண்டறியும் இலக்கை மையமாகக் கொண்டு, மதிப்புக்குரிய இந்தியன் இன்ஸ்டிட்டியூட் ஆப் டெக்னாலஜி கான்பூரில் பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது. மருத்துவ மேதையாக அறியப்பட்ட அக்ரித், பயோ இன்ஜினியரிங் படிப்பதற்காக கான்பூரில் உள்ள ஐஐடியில் சேர்ந்தார்.
தர்மசாலாவில் உள்ள இடைநிலைக் கல்வித் தலைவர் அக்ரித்துக்கு ஆதரவையும் வழிகாட்டுதலையும் வழங்கினார். 12 வயதில், அறிவியல் படிப்பதற்காக சண்டீகர் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். 17 வயதில், அவர் பயன்பாட்டு வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
2016-இல் ஐஐடி கான்பூர் நிறுவனத்தில் பயோ இஞ்சினியரிங் பட்டக்கல்வியை முடித்தார். இப்போது ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிக் கல்வியை மேற்கொண்டுள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications