பிரிட்டன் நாட்டு பிரதமர் ரிஷி சுனக் மனைவியும், இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி-யின் மகள் அக்ஷதா மூர்த்தி-க்கு அடுத்தடுத்து பல பிரச்சனைகள் வெடித்து வருகிறது. ரிஷி சுனக் பிரதமராகும் முன் அக்ஷதா மூர்த்தி வரி ஏய்ப்பு செய்கிறார் என புகார்கள் எழுந்தது, ரிஷி சுனக் பிரதமரான பின்பு இன்போசிஸ் வாயிலாக ரஷ்யாவில் இருந்து வருமானம் பெறுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதேபோல் அக்ஷதா மூர்த்தி முதலீடு செய்துள்ள நிறுவனத்திற்கு (KORU KIDS) பிரிட்டன் அரசின் திட்டங்கள் கிடைத்தது அதன் மூலம் அதிகப்படியான லாபத்தை அக்ஷதா மூர்த்தி பெறுகிறார் என பல குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த நிலையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க திட்டமிட்ட அக்ஷதா மூர்த்தி அதிரடியான முடிவை எடுத்துள்ளார்.

Akshata Murty இந்த வாரம் பிரிட்டன் நாட்டின் நிறுவனங்கள் அமைப்பில் தாக்கல் செய்த அறிக்கையில் அவர் துவங்கிய கட்டமரான் வென்சர்ஸ் யூகே லிமிடெட்ட நிறுவனத்தின் வாயிலாக செய்த முதலீட்டை திரும்ப பெற்று இந்நிறுவனத்தை மூட உள்ளதாக அறிவித்துள்ளார். Akshata Murty பிரிட்டன் நாட்டின் முதன் பெண்மணி மட்டும் அல்லாமல் பிஸ்னஸ்வுமென் ஆகவும் உள்ளார்.
சொல்லப்போனால் கட்டமரான் வென்சர்ஸ் யூகே லிமிடெட்ட நிறுவனத்தை அக்ஷதா மூர்த்தி மற்றும் ரிஷி சுனக் இணைந்து தான் 2013ல் துவங்கினர். இந்த நிறுவனத்தில் ரிஷி சுனக் ஒரு டைரக்டர் ஆக இருந்தார், ஆனால் இந்த பதவியை 2015ல் முழு நேர அரசியலில் பங்கு பெறும் திட்டத்துடன் ராஜினாமா செய்தார். இதன் மூலம் தற்போது வரையில் அக்ஷதா மூர்த்தி மட்டுமே டைரக்டராக உள்ளார்.
இன்போசிஸ் நிறுவனத்தில் அக்ஷதா மூர்த்தி வைத்துள்ள பங்குகள் மற்றும் அதன் டிவிடென்ட் தொகையை அடிப்படையாக வைத்து கட்டமரான் வென்சர்ஸ் யூகே லிமிடெட்ட நிறுவனம் துவங்கப்பட்டு ஒரு முதலீட்டு நிறுவனமாக இயங்கி வருகிறது. கட்டமரான் வென்சர்ஸ் யூகே லிமிடெட்ட நிறுவனத்தின் மொத்த நிதி மதிப்பீடாக 4.6 பில்லியன் பவுண்ட் ஆக மதிப்பிடப்படும் வேளையில் முதலீட்டு மதிப்பு 3.8 பில்லியன் பவுண்ட் ஆக மதிப்பிடப்பட்டு உள்ளது.
அக்ஷதா மூர்த்தி முதலீடு செய்துள்ள நிறுவனங்களின் மூலம் பெரிய அளவிலான லாபமும் வரவில்லை, இதேபோல் கட்டமரான் வென்சர்ஸ் முதலீட்டை பெற்ற Mrs Wordsmith, The New Craftsmen, Digme Fitness ஆகியவை அடுத்தடுத்து 3 வருடத்தில் மூடப்பட்டது.
Study Hall, Koru Kids போன்ற கட்டமரான் வென்சர்ஸ் முதலீட்டை பெற்ற நிறுவனங்கள் பிரிட்டன் நாட்டு அரசு உதவிகள் பெற்ற நிலையில் இது பிரிட்டன் நாட்டின் நாடாளுமன்றத்தில் பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது. இது ரிஷி சுனக்கிற்கு பெரும் தலைவலியாக மாறிய நிலையில் இந்த நிறுவனங்களை மொத்தமாக மூட முடிவு செய்துள்ளார் அக்ஷதா மூர்த்தி. இது இவருடைய வர்த்தக பயணத்தில் பெறும் பின்டைவாக பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications