இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி, வாரத்தில் 70 மணி நேர வேலை செய்வதை வலியுறுத்தி, இந்தியாவின் இளைஞர்களை தேசத்தின் வளர்ச்சிக்காக தங்களை அர்ப்பணிக்குமாறு கூறியதற்காக சில காலமாக செய்திகளில் இடம் பெற்று வருகிறார்.
அவரது இளமைக்காலத்தில் நாராயண மூர்த்தி இவ்வாறே வேலை பார்த்துள்ளார். இது அவரது பிள்ளைகளுக்கும் தெரியும்.

நாராயண மூர்த்தியும் அவரது மனைவி சுதா மூர்த்தியும் சேர்ந்து அவர்களது வாழ்க்கை வரலாறை சித்தரிக்கும் ஆன் அன்காமன் லவ்: தி இயர்லி லைப் ஆப் சுதா அண்டு நாராயண மூர்த்தி என்ற நூலை வெளியிட்டனர்.
அதில் தங்களது குடும்பத்தை வளர்ப்பதற்கு பட்ட சிரமங்களையும் இன்போசிஸ் நிறுவனத்தை வழிநடத்தியதைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளனர். இன்போசிஸ் இன்றைக்கு நாட்டின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமாக உள்ளது.
இன்றைக்கு மிகப் பெரிய விருட்சமாக வளர்ந்துள்ள இன்போசிஸ் நிறுவனத்தை நாராயண மூர்த்தி எவ்வளவு அர்ப்பணிப்போடு பாடுபட்டு வளர்த்தார் என்ற விவரம் இந்தப் புத்தகத்தில் உள்ளது.
அதேவைளையில் தங்களது பிள்ளைகளான அக்ஷதா மூர்த்தி, ரோஹன் ஆகியோரை சுதா மூர்த்தி எப்படி சிறப்பாக வளர்த்தார் என்பதையும் இந்தப் புத்தகத்தில் அறிந்து கொள்ளலாம்.
இதில் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதா தனது தந்தையின் இருப்பு இல்லா விரக்தியில் அவருடன் சண்டையிட்ட தருணம் பற்றி கூறப்பட்டுள்ளது.
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவியான அக்ஷதா மூர்த்தி சில ஆண்டுகளுக்கு முன்பு தனது உண்மையான தந்தை தனது தாத்தா என்று குறிப்பிட்டார். நாராயண மூர்த்தியை தனது போனஸ் தந்தை என்று குறிப்பிட்டார்.
நாராயண மூர்த்தியின் மகனும் அவருடன் சண்டையிட்டார். யாரை நீங்கள் மிகவும் விரும்புகிறீர்கள்? என்னையா, அக்ஷதாவையா அல்லது இன்போசிஸ்ஸையா என்று துணிச்சலுடன் கேட்டார். ஆனால் மகனுக்கு ஆச்சரியம் தரும் வகையில் நாராயண மூர்த்தி, இருவரையும் சமமாக விரும்புகிறேன் என்று பதிலளித்தார்.
சமீபத்தில், இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி, இந்திய இளைஞர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தது. இதையடுத்து இளம் தொழிலாளர்களின் கோபத்தை இந்த அறிக்கை எதிர்கொண்டது.
77 வயதான ஐஐடி பட்டதாரி ஒரு நேர்காணலில் இளைஞர்களுக்கான வாரத்தில் 70 மணி நேரம் வேலை செய்வது நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தித்திறனை அதிகரிக்கும் என்று கூறினார். அத்துடன் தான் வேலை செய்யும் போது வாரத்துக்கு 6 நாட்களும் 70 மணிநேரத்துக்கும் மேலாக வேலை செய்ததாகவும் இதனால் பல்வேறு பயன்களை அடைந்ததாகவும் நாராயண மூர்த்தி கூறினார்.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications