இங்கிலாந்தின் பெஸ்ட் டிரஸ்டு மென் & விமன்களுக்கான 2023 ஆம் ஆண்டு பட்டியலில் இங்கிலாந்து பிரதமரின் மனைவி அக்ஷதா மூர்த்தி இடம் பெற்றுள்ளார்.
இந்தப் பட்டியலில் பிரிட்டிஷ் வோக் நிறுவன எடிட்டோரியல் தலைவர் சியோமா நாடி, வேல்ஸ் இளவரசி கேத்தரின் மிடில்டன், நடிகை பமீலா ஆண்டர்சன், மூன்றாம் மன்னர் சார்லஸ், டேனியல் கிரெய்க் உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர்.

இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகளான அக்ஷதா மூர்த்தி எழுத்தாளருமாவார். பிரிட்டிஷ் பிரதமரின் மனைவியான பின்னர் அக்ஷதா மூர்த்தி 570 பவுண்டு ஸ்லைடர்களை அணிந்திருந்தார்.
அவரது கணவர் ரிஷி சுனக்குடன் விதவிதமான ஆடைகளை அக்ஷதா மூர்த்தி அணிந்திருந்தார். இது உலகளவில் பிரபலமானது.
லேடி கேமரூனின் முன்னாள் வலதுகரமாக விளங்கிய இசபெல் ஸ்பியர்மென் கூறுகையில், பிரிட்டிஷ் பேஷன் லேபிளை பிரபலப்படுத்தியதில் அக்ஷதா மூர்த்தி முக்கியப் பங்கு வகிக்கிறார். அத்துடன் அவரது இந்தியப் பாரம்பரியத்தையும் பறைசாற்றுகிறார் என்றார்.
லண்டனில் நவம்பரில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தில் அக்ஷதா மூர்த்தி கலக்கி உள்ளார். ராயல் புளூ நிறத்தில் அவர் அணிந்திருந்த மைசூரு சில்க் சேலை எல்லோரையும் கவர்ந்திழுத்தது. அதற்குப் பொருத்தமாக பாரம்பரியமான கண்டபெருண்டா நெக்லஸ் கர்நாடகத்தின் சின்னமாக விளங்கியது.
தில்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டுக்கு வந்திருந்த போது அக்ஷதா மூர்த்தி அணிந்திருந்த ஆடைகள் கண்ணைப் பறித்தன. பிங்க் மாங்காய் நிற சேலை, இலியாக் டிரஸ், பிங்க் கோரல் பிரிண்டடு கோஆர்டு ஆகிய ஆடைகளில் அக்ஷதா எழில்மிகு தோற்றத்தில் இருந்தார். பிரதமர் ரிஷி சுனக், அக்ஷதா மூர்த்தி தம்பதிதான் நம்பர் 10 டௌனிங் தெரு வீட்டில் குடியிருந்த பணக்காரர்கள் ஆவர்.
2023இல் பிரிட்டனின் சிறந்த ஆடை அணிந்தவர்களின் பட்டியலில் டாப் இடத்தை அக்ஷதா மூர்த்தி பெற்றார். 43 வயதான அக்ஷதா மூர்த்தி ஒரு தொழிலதிபர் மற்றும் பேஷன் டிசைனர். டாட்லர் இதழ் பட்டியலில் இடம்பிடித்தவர்.
570 பவுண்டு மதிப்புள்ள ஜேடபிள்யூ ஆண்டர்சன் பிராண்டு செருப்பை அணிந்து ஒரு பள்ளியின் ஓட்டத்தில் கலந்து கொண்டபோது அக்ஷதா மூர்த்தி பெரிதும் பேசப்பட்டார்.
அக்ஷதா மூர்த்தியும், ரிஷி சுனக்கும் ஆடம்பரமான டிசைனர் ஆடைகளை அணிந்திருப்பது குறித்து கடும் விமர்சனங்களுக்கு ஆளாகினர். ரிஷி சுனக் அணிந்திருந்த ஒரு கோட் சூட் 3500 பவுண்டு, பிராடா பிராண்டு ஷூ 490 பவுண்டு ஆகும். ஜூலை மாதத்தில் நடைபெற்ற டீஸ்ஸைடு பிரசாரத்தின்போது இதை சுனக் அணிந்திருந்தார்.
இப்போது அக்ஷதா தனது வார்ட்ரோப்பில் உள்ள காஸ்ட்லியான ஆடைகளை எடுத்துவிட்டு பிரிட்டிஷின் விலை குறைந்த ஆடைகளை அடுக்கி வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications