பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்-ன் காதல் மனைவியும், இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மகளுமான அக்ஷதா மூர்த்தி 412 கோடியை இழந்தார். இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் துவங்கிய சில மணிநேரத்தில் இன்போசிஸ் பங்குகள் 10 சதவீதம் வரையில் சரிந்த காரணத்தால் இந்த இழப்பு ஏற்பட்டு உள்ளது.
பங்கு சரிவின் வாயிலாக இன்போசிஸ் பங்கு முதலீட்டாளர்கள் அனைவரும் அதிகப்படியான இழப்பை எதிர்கொண்டனர். 2023 ஆம் ஆண்டில் ஏற்கனவே மோசமாக செயல்பட்டு வந்த இன்போசிஸ் இன்றைய சரிவின் மூலம் பெரும் பாதிப்பை முதலீட்டாளர்கள் எதிர்கொண்டனர்.

இந்த நிலையில் இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளில் லாபம் மற்றும் வருவாய் அளவுகளில் குறிப்பிட்ட வளர்ச்சி பெற்று இருந்தாலும், 2024ஆம் நிதியாண்டுக்கான வருவாய் வளர்ச்சி கணிப்பை 4-7 சதவீதத்தில் இருந்து 1 முதல் 3.5 சதவீதமாக குறைத்துள்ளது. இதன் எதிரொலியாக இன்போசிஸ் பங்குகள் இந்தியா மற்றும் அமெரிக்க பங்குச்சந்தையில் பெரும் சரிவை சரிந்தது.
மும்பை பங்குச்சந்தையில் இன்று இன்போசிஸ் பங்குகள் 10 சதவீதம் சரிந்தாலும், தற்போது 2 மணியளவில் 8.46 சதவீதம் சரிந்து 1,326.25 ரூபாய் வரையில் சரிந்துள்ளது, இதேபோல் அமெரிக்காவின் நியூயார்க் பங்குச்சந்தையில் இருக்கும் இன்போசிஸ் ADR பங்குகள் 1.36 சதவீதம் சரிந்து 16 டாலராக குறைந்துள்ளது.
இந்த மாபெரும் சரிவு அனைத்து இன்போசிஸ் முதலீட்டாளர்கள், பங்குதாரார்களை பாதித்துள்ளது. பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்-ன் காதல் மனைவியும், இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மகளுமான அக்ஷதா மூர்த்தி சுமார் 1.07 சதவீத பங்குகளை வைத்திருக்கும் நிலையில், இவரிடம் 3,89,57,096 இன்போசிஸ் பங்குகள் உள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் இன்போசிஸ் பங்கு விலை 105.80 ரூபாய் வரையில் சரிந்த காரணத்தால் 3,89,57,096 இன்போசிஸ் பங்குகளுக்கு அக்ஷதா மூர்த்தி சுமாப் 412 கோடி ரூபாயை இழந்துள்ளார். மார்ச் காலாண்டில் ஈவுத்தொகை மூலம் பல கோடியை சம்பாதித்த நிலையில் கடந்த 3 மாதத்தில் அதிகப்படியான இழப்பை சந்தித்து, ஜூன் காலாண்டிலும் இது தொடர்கிறது.
2024 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டாக இருக்கும் ஜூன் காலாண்டில் இன்போசிஸ் சுமார் 5,945 கோடி ரூபாய் அளவிலான தொகையை மொத்த லாபமாக பெற்றுள்ளது, இது கடந்த நிதியாண்டின் ஜூன் காலாண்டை விடவும் 11 சதவீதம் அதிகமாகும். இதேபோல் இன்போசிஸ் நிறுவனத்தின் மொத்த வருமானம் 9.5 சதவீதம் அதிகரித்து 38,494 கோடி ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications