இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அதிகாரப்பூர்வ இல்லமான 10 டவுனிங் தெருவில் அவரும் அவரது குடும்பத்தினரும் தீபாவளியைக் கொண்டாடிய போட்டோ இணையத்தில் பெரிய அளவில் வைரலானது. இதைத் தாண்டி அக்ஷதா மூர்த்தி அணிந்திருந்த ஒரு நெக்லஸ் பற்றித் தான் மொத்த இந்தியாவும் பேசி வருகிறது.
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அக்ஷதா மூர்த்தி இருவரும் தீவிரமான கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் என்பது ரிஷி சுனக் பதவியேற்றி நாளில் இருந்து அவரது வீட்டுக்கு வந்த விருந்தினர்கள் வைத்து புரிந்துகொண்டோம். ரிஷி சுனக் மற்றும் அக்ஷதா மூர்த்தி ஆகியோரின் இந்திய பணத்திலும் பல கோயில்களுக்குச் சென்றனர்.

இன்த நிலையில் இந்து மக்களின் முக்கியப் பண்டிகையான தீபாவளியின் போது குடும்பத்துடன் கொண்டாடியது மட்டும் அல்லாமல் அக்ஷதா மூர்த்தி மற்றும் இரு பிள்ளைகளும் இந்திய உடையில் தீபத்தை ஏற்றி கொண்டாடினர்.
இப்போது அக்ஷதா மூர்த்தி நீல நிற சேலையில் தனது சொந்த மாநிலமான கர்நாடகாவின் மகிமையை உலகளவில் கொண்டு சேர்க்கும் விதமாக ஒரு நெக்லஸ் அணிந்திருந்தார். இந்தப் புகைப்படம் தான் தற்போது மொத்த கர்நாடக மக்களும் பேசி வருகின்றனர்.

இங்கிலாந்தின் முதல் பெண்மணியான அக்ஷதா மூர்த்தி மைசூரு பட்டுப் புடவை மற்றும் கந்தபெருண்டா நெக்லஸ்-ஐ அணிந்திருந்தார். கந்தபெருண்டா அல்லது பேருண்டா என்பது இந்து புராணங்களில் இரண்டு தலைகள் கொண்ட பறவை மற்றும் இது விஷ்ணுவின் வடிவமாகக் கருதப்படுகிறது.

இந்தக் கந்தபெருண்டா தென்னிந்தியாவைக் குறிப்பாக அக்ஷதாவின் சொந்த மாநிலமான கர்நாடகாவை ஆண்ட பல பேரரசுகளின் அதிகாரப்பூர்வ சின்னமாகப் பயன்படுத்தினர். மேலும் இது கர்நாடக அரசின் சின்னமாகவும் இருக்கிறது. கர்நாடக மாநில பெருமையைத் தற்போது பிரிட்டன் அதிகாரத்தின் உச்சத்தில் அடைந்துள்ளது எனப் பலரும் பெருமையாகப் பேசி வருகின்றனர்.

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அக்ஷதா மூர்த்தி ஆகியோரின் தீபாவளி கொண்டாட்டத்தில் பல அரசு அதிகாரிகள் கலந்துக்கொண்ட நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மனைவி கலந்துக்கொண்டனர். இவருவரின் சந்திப்பின் போது அமைச்சர் ஜெய்சங்கர் விராட் கோலி கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட் மற்றும் விநாயகர் சிலை ஆகியவற்றைப் பரிசாக அளித்தனர்.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications