மும்பை வீட்டை ரூ.6 கோடிக்கு விற்ற நடிகர் அக்சய்குமார் .. வாங்கியது எத்தனை கோடி தெரியுமா?

பிரபல பாலிவுட் நடிகர் அக்சய்குமார் தனக்கு சொந்தமான மும்பை வீட்டை ரூபாய் 6 கோடிக்கு விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வீட்டை அவர் கடந்த 2017ஆம் ஆண்டு வாங்கியதாகவும் தற்போது அவர் இந்த சொத்தை விற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது

மேலும் இந்த விற்பனை குறித்த ஆவணங்கள் வட இந்திய ஊடகங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அக்சய்குமார் சொத்துக்கள்

அக்சய்குமார் சொத்துக்கள்

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அக்சய்குமார் என்பதும் அவரது சம்பளம் கோடிக்கணக்கில் உள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தனக்கு கிடைத்த வருமானத்தை அவர் பல்வேறு சொத்துக்கள் வாங்குவதில் முதலீடு செய்து வருகிறார் என்பதும் மும்பையில் பல இடங்களில் அவருக்கு சொந்த பிளாட்டுகள், பங்களாக்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

 சொத்து விற்பனை

சொத்து விற்பனை

இந்த நிலையில் தனக்கு சொந்தமான மும்பை அந்தேரி வெஸ்ட் என்ற பகுதியில் உள்ள பிளாட்டை அவர் பாலிவுட் இசையமைப்பாளர் தபூ மாலிக் என்பவருக்கு ரூ.6 கோடிக்கு விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சொத்தை அக்சய்குமார் கடந்த ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி விற்பனை செய்துள்ளதாக வைரலாகி கொண்டிருக்கும் ஆவணங்களில் இருந்து தெரிய வருகிறது

 அந்தேரி மேற்கு

அந்தேரி மேற்கு

இந்த சொத்து அந்தேரி மேற்கு பகுதியில் டிரான்ஸ்கான் ட்ரையம்ப்-டவர் 1, ஏ-2104 என்ற இடத்தில் உள்ளது என்பதும் 1,281 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த வீட்டின் பால்கனி மட்டுமே 59 சதுர அடி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

வாங்கியது எத்தனை கோடிக்கு?

வாங்கியது எத்தனை கோடிக்கு?

கடந்த 2017ஆம் ஆண்டு அக்சய்குமார் இந்த சொத்தை 4.12 கோடிக்கு வாங்கியதாகவும், அதே காலகட்டத்தில் அவர் நான்கு வீடுகளை ஒட்டு மொத்தமாக 15.1 கோடி ரூபாய்க்கு வாங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 4.12 கோடிக்கு வாங்கிய வீட்டை 5 ஆண்டுகள் கழித்து அவர் 6 கோடிக்கு விற்பனை செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

அக்சய்குமாரின் முதலீடுகள்

அக்சய்குமாரின் முதலீடுகள்

அக்சய்குமார் ஒரு மிகச்சிறந்த முதலீட்டாளர் என்பது அவருக்கு நெருக்கமானவர்களுக்கு தெரியும். மும்பை முழுவதும் பல இடங்களில் குறிப்பாக அந்தேரி மேற்கில் உள்ள பாரத் ஆர்க், அந்தேரி கிழக்கு ஜேவிஎல்ஆர் ஓபராய் பிரிஸ்மா, ஜூஹுவில் உள்ள பைரோஜா கோர்ட், அந்தேரி மேற்கில் உள்ள ஓபராய் ஸ்பிரிங், ஜூஹுவில் உள்ள பிரைம் பீச் ஆகிய பகுதிகளில் அக்சய்குமார் சொத்துக்களை வாங்கி முதலீடு செய்துள்ளார். சொத்துக்களை வாங்கும் அக்சய்குமார் அதை சில ஆண்டுகள் கழித்து விற்பனை செய்வது அல்லது வாடகைக்கு விடுவது ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+