வருகின்ற ஏப்ரல் 30-ஆம் தேதியன்று அட்சய திருதியை கொண்டாடப்பட உள்ளது. அட்சய திருதியை தினத்தன்று தங்கம் வாங்குவது லட்சுமி தேவியின் பூரண அருளைப் பெற்று தரும் என்பது நீண்ட காலமாக இருந்து வரும் நம்பிக்கை. இதற்காக சிலர் டிஜிட்டல் தங்கத்திலும் முதலீடு செய்கின்றனர். அப்படி டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வதை ஊக்குவிக்கும் விதமாக டிஜிட்டல் கட்டண தளங்களான போன் பே மற்றும் பேடிஎம் சிறப்பு சலுகைகளை வழங்கவுள்ளன. பாரம்பரிய தங்கம் வாங்கும் பழக்கங்களை டிஜிட்டல் தங்கத்திற்கு மாற்றும் நோக்கில் இத்தகைய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
போன் பே: போன் பே அப்ளிகேஷனைப் பயன்படுத்தி 24 கேரட் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்து ரூ. 2,000 அல்லது அதற்கு மேல் செலவழித்தால் 1 சதவீத கேஷ்பேக் கிடைக்கும். இந்தச் சலுகை ஏப்ரல் 30-ஆம் தேதி அன்று ஒருமுறை மட்டுமே செல்லுபடியாகும். அதோடு கேரட்லேன் கடைகள் அல்லது கேரட்லேன் இணையதளங்கள் போன்றவற்றில் டிஜிட்டல் தங்கத்தை வாங்கினாலும் வாடிக்கையாளர்கள் தள்ளுபடி பெறலாம். தங்க நாணயங்களுக்கு 2 சதவீத தள்ளுபடி, கல் பதிக்கப்படாத நகைகளுக்கு 3 சதவீத தள்ளுபடி, கல் பதிக்கப்பட்ட நகைகளுக்கு 5% தள்ளுபடி பெறலாம்.

போன் பே தங்கத்தை கேரட்லேன், MMTC-PAMP, சேப் கோல்டு போன்ற நம்பகமான பிராண்டுகளில் இருந்து வாங்குகிறது. இதனால் தங்கத்தின் தூய்மை பாதுகாக்கப்படுவதோடு உத்தரவாதமான சேமிப்பையும் உறுதி செய்ய முடியும். வெறும் 5 ரூபாயில் இருந்து தொடங்கும் எஸ்ஐபி மூலமாகவும் நீங்கள் ஃபோன் பேவில் முதலீடு செய்யலாம்.
பேடிஎம்: டிஜிட்டல் கோல்டு வாங்குவதை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு "கோல்டன் ரஷ்" என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது. அட்சய திருதியை போன்ற மங்களகரமான நாட்களில் தங்கம் வாங்கினால் தொடர்ந்து தங்கம் சேரும் என்பது இந்தியர்களிடையே நிலவும் நம்பிக்கை. இந்த பாரம்பரியத்தை டிஜிட்டல் மயமாக்கும் வசதியை தான் தற்போது போன் பே வழங்கி வருகிறது. பயனர்கள் எளிதாகவும் லாபகரமாகவும் தங்கத்தில் முதலீடு செய்யலாம்.
கோல்டன் ரஷ்-இன் முக்கிய நோக்கமே பயனர்களை டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்ய வைப்பது தான். இதன் மூலம் 500 ரூபாய் முதல் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்யலாம். இதனால் பரிவர்த்தனை மதிப்பில் 5 சதவீதம் வரை ரிவார்ட் புள்ளிகளும் கிடைக்கும். போன்பேவை போல பேடிஎம் நிறுவனமும் MMTC-PAMP போன்ற டிரஸ்டர்ட் பிராண்டில் இருந்து தான் தங்கத்தை பெறுகிறது. அதோடு கோல்ட் எஸ்ஐபி-களில் வெறும் 9 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம்.
போன் பே மூலம் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது எப்படி?:
ஸ்டெப் 1: முதலில் போன் பே அப்ளிகேஷனை திறந்து கொள்ளுங்கள்.
ஸ்டெப் 2: அதன் பின்னர் கோல்ட் செக்ஷன் என்ற பகுதிக்குச் செல்லுங்கள்.
ஸ்டெப் 3: எங்கிருந்து தங்கம் வாங்க நினைக்கிறீர்களோ? அந்தக் கடையைத் தேர்வு செய்யுங்கள். ஏப்ரல் 30, 2025 அன்று ஒருமுறை 2,000-த்திற்கும் அதிகமாக முதலீடு செய்து டிஜிட்டல் தங்கத்தை வாங்கினால் 1 சதவீத கேஷ் பேக் கிடைக்கும். இதன் மூலம் அதிகபட்சமாக ரூ. 2000 வரை கேஷ்பேக் பெறலாம்.
ஸ்டெப் 4: யுபிஐ, கிரெடிட் கார்டு போன்றவற்றைப் பயன்படுத்தி பணம் செலுத்துங்கள். இதற்கும் 1 சதவீத கேஷ்பேக் கிடைக்கும்.
பேடிஎம் மூலம் டிஜிட்டல் தங்கத்தை வாங்குவது எப்படி?:
ஸ்டெப் 1: முதலில் பேடிஎம் அப்ளிகேஷனைத் திறந்து கொள்ளுங்கள்.
ஸ்டெப் 2: பேடிஎம் கோல்டு அல்லது டெய்லி கோல்ட் எஸ்ஐபி போன்றவற்றை சர்ச் செய்யுங்கள். முதலீட்டு தொகையைத் தேர்ந்தெடுங்கள். வெறும் 9 ரூபாயிலிருந்து தேர்வு செய்யலாம்.
ஸ்டெப் 3: யுபிஐ, நெட் பேங்கிங், டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்துங்கள்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications