இந்த ஆண்டு அட்சய திருதியை ஏப்ரல் 30-ஆம் தேதியன்று கொண்டாடப்பட இருக்கிறது. இந்துக்கள் கொண்டாடும் முக்கியமான பண்டிகைகளில் இதுவும் ஒன்று. அட்சய திருதியை அன்று நகை வாங்குவது சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று தரும் என்பது நீண்ட காலமாக இருந்து வரும் நம்பிக்கை. அன்றைய தினம் நீங்கள் வாங்கும் தங்கம், வெள்ளி மற்றும் இதர பொருட்கள் என்றுமே குறையாமல் நீண்ட நாட்களுக்கு நிலைத்திருக்கும்.
இதனால்தான் மக்கள் கூட்டம் அட்சய திருதியை நாளன்று நகைக்கடைகளில் அலைமோதும். அன்றைய தினம் தங்கள் வாழ்நாளில் செல்வத்தை வரவேற்க பலர் தங்கம் வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

அட்சய திருதியை 2025: திரிக் பஞ்சாங்கத்தின் படி இந்த ஆண்டு அட்சய திருதியை புதன்கிழமை ஏப்ரல் 30-ஆம் தேதி அன்று வருகிறது. அட்சய திருதியை பூஜை செய்வதற்கான நல்ல நேரம் காலை 5.41 மணி முதல் பிற்பகல் 12.18 மணி வரை மொத்தம் 6.37 மணி நேரம். அட்சய திருதியை திதி ஏப்ரல் 29-ஆம் தேதி அன்று மாலை 5.31 மணிக்கு தொடங்கி மறுநாள் ஏப்ரல் 30 பிற்பகல் 2.12 மணி வரை இருக்கிறது.
விஷ்ணு பகவானுக்கு பிடித்த தினமாக அட்சய திருதியை இருந்து வருகிறது. அதோடு விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராம ஜெயந்தியும் அன்றைய தினம் தான் கொண்டாடப்படுகிறது.
அட்சய திருதியை என்பதன் பொருள் என்ன?: ஆட்சியை என்ற சொல்லுக்கு "நீண்ட" என்பது பொருள். அதாவது என்றுமே அழியாதது என்றும் வைத்துக் கொள்ளலாம். திருதியை என்பது வளர்பிறையின் மூன்றாம் நாளை குறிக்கிறது. இந்த நாளில் செய்யப்படும் மங்களகரமான செயல்கள் அனைத்தும் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கும் என்பது நம்பிக்கை.
அட்சய திருதியை நாளில் மக்கள் என்னென்ன செய்யலாம்?: பெரும்பாலும் புதிய தொழிலை தொடங்குவதற்கு ஏற்ற நாளாக இருக்கும். அதே போல புதிதாக வேலையில் சேர்ந்தாலும் அன்றைய தினம் வேலையை தொடங்கலாம். விவசாயம், புது வீடு குடிபோதல், பிற புதிய தொடக்கங்கள் அனைத்திற்கும் அட்சய திருதியை ஏற்ற நாள். இந்த நாளில் மக்கள் பிரார்த்தனை செய்து கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தலாம். அதேபோல சிறப்பு பூஜைகளையும் நடத்தலாம். தர்மம் செய்வதற்கும் அன்றைய தினம் ஏற்ற நாள். எனவே ஏழை எளியவருக்கு உணவு, உடை தானம் வழங்கலாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications