சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாட்டின் மிகப்பெரிய காலணி தயாரிப்பு நிறுவனமான கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் (KICL) நிறுவனத்தில், கத்தார் அரச குடும்பத்துடன் தொடர்புடைய கத்தார் நிறுவனத்தில் சிறிய அளவிலான பங்குகளை கையகப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது.
ஃபலாஹ் ஜாசிம் ஜே.எம். அல்-தானி-க்கு (Falah Jassim J.M. AL-Thani) சொந்தமான எஃப்ஜே குளோபல் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் (FJ Global and Investment), KICL இன் 7,056,000 பங்குகளை வாங்க உள்ளது. கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு இந்த பங்கு விற்பனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஒவ்வொரு பங்கும் 5 ரூபாய் முகமதிப்பும், பங்கு விலை 25 ஆக நிர்ணயிக்கப்பட்டு இந்த பங்குகள் விற்பனை செய்யப்பட்ட உள்ளது.

KICL வெளியிட்ட அறிக்கையில், இந்த பங்கு விற்பனைக்கு பின்பு, தற்போதைய நிறுவனத்தின் புரமோட்டர் ரஃபீக் அகமது நிறுவனத்தில் தனது முதலீட்டை அதிகரிக்க விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஃப்ஜே குளோபல் அண்ட் இன்வெஸ்ட்மென்ட்டுடனான பரிவர்த்தனை முடிந்த பிறகும், ரஃபீக் அகமது தனது பங்கு இருப்பை தற்போதைய 47 சதவீதத்தை தக்க வைத்துக் கொள்ளும் வகையில் முதலீடு செய்வார் என தெரிகிறது.
கத்தார் அரசு நிறுவனம் சென்னை கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடெட்-ல் நேரடி பங்கு முதலீடு செய்ததிற்கு அப்பால், KICL இயக்குநர்கள் குழு கத்தாரில் ஒரு புதிய கூட்டணி நிறுவனத்தை உருவாக்கவும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய வணிக நிறுவனம் KICL ஆல் 70 சதவீத பங்குகளைக் கொண்டு பெரும்பான்மையாக சொந்தமாக இருக்கும். மீதமுள்ள 30 சதவீதம் அல்-தானியால் வைத்திருக்கும் என தெரிகிறது.
இந்த புதிய கூட்டணி நிறுவனத்தின் மூலம் கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் சர்வதேச சந்தைகளுக்கு விரிவாக்கத்தை எளிதாக்கும். இதன் மூலம் அதன் உலகளாவிய வர்த்தகத்தையும், உற்பத்தியும் விரிவுபடுத்த முடியும்.
மேலும், KICL இயக்குநர்கள் குழு நிறுவனத்தின் பங்கு மூலதனத்தை அதிகரிக்க முன்மொழிந்துள்ளது. தற்போதைய 25 கோடியிலிருந்து 75 கோடியாக உயர்த்த திட்டமிட்டு உள்ளது.
KICL நிர்வாகம், ரஃபீக் அகமது-வின் பீனிக்ஸ் கோத்தாரி ஃபுட்வேர் லிமிடெட்டில் உள்ள 30 சதவீத உரிமையையும் கையகப்படுத்த முயன்று வருகிறது. பீனிக்ஸ் கோத்தாரி தற்போது பெரம்பலூரில் தோல் அல்லாத காலணி பூங்காவை உருவாக்கி இயங்கி வருகிறது.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்



Click it and Unblock the Notifications