இந்திய ஊழியர்களின் தூக்கத்தைக் கெடுக்கும் வகையில் வாரத்தில் 70 மணிநேரம் இளைஞர்கள் பணியாற்ற வேண்டும் என இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்திக் கூறியது மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனம் எதிர்கொண்டது. இந்த நிலையில் அவர் யாரென்று தெரியாமல் நீண்ட நேரம் பேசிய சம்பவத்தை டிவிட்டரில் ட்ரூகாலர் சிஇஓ ஆலன் மாமெடி தெரிவித்துள்ளார்.
Truecaller இன் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான Alan Mamedi, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி-யை முதன்முதலில் சந்தித்தபோது, தான் ஒரு டெக் சாம்ராஜ்ஜியத்தின் நிறுவனர் மற்றும் ஒரு பில்லியனர்-ஐ சந்திப்பது தனக்குத் தெரியாது என்று தெரிவித்துள்ளார்.

மைக்ரோ பிளாக்கிங் தளமான X தளத்தில் Alan Mamedi பதிவிட்ட ஒரு பதிவில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் நாராயண மூர்த்தி அவர்களைச் சந்தித்த போது நம்பமுடியாத தாழ்மையான நபராக விளங்கினார் என்று தெரிவித்தார். அந்த நேரத்தில், எங்கள் இருவருக்கும் நாங்கள் யார்..? என்ன செய்கிறோம் என்பது இருவருக்கும் தெரியாது, ஆனால் அவர்கள் ஒரு மணி நேரம் வாழ்க்கையைப் பற்றிப் பேசினோம் எனத் தெரிவித்தார்.
ஒரு மணிநேரம் பேசிய பின்பு இறுதியாக நாராயண மூர்த்தி அவர்களிடம் நீங்க என்ன செய்கிறீர்கள் என்று கேட்டபோதும், அவர் இன்போசிஸ் பற்றிப் பேசவில்லை. மாறாக, அவர் தன்னை ஒரு நன்கொடையாளராக அடையாளப்படுத்திக் கொண்டார்.
மேலும் அவர் எனக்கு வாழ்க்கையில் அதிர்ஷ்டம் இருப்பதால், நான் திருப்பித் தர வேண்டும் என்று என் மனைவி எப்போதும் என்னிடம் சொல்லிக்கொண்டு இருப்பால், அதைத்தான் இன்று செய்கிறேன். Giving back என இன்போசிஸ் நாராயண மூர்த்திக் கூறியதாக Alan Mamedi பதிவிட்டார்.
ட்ரூகாலர் CEO அடுத்த டிவிட்டில் நாராயண மூர்த்தி இன்போசிஸ் பற்றிச் சிறிது நேரம் கழித்துக் கூறி ஆச்சரியப்படுத்தினார் எனவும் தெரிவித்தார். சிறுவயதில், தான் வளர்ந்து இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் வேலை செய்ய விரும்பியதாக அவர் கூறினார், அவரது கணினி பழுதடைந்தபோது, ஒரு இன்போசிஸ் ஊழியர் அதைச் சரிசெய்ய வீட்டிற்கு வந்தார்.
Alan Mamedi தனது சிறு வயதில் ஒரு நிறுவனத்திடம் இருந்து பழைய கம்பியூட்டரை வாங்கிப் பயப்படுத்தி வந்தார். அந்தக் கம்பியூட்டருக்கு இன்போசிஸ் சர்வீஸ் கான்டிராக்ட் இருந்தது. இந்த நிலையில் கம்பியூட்டர் பழுதான நிலையில் இன்போசிஸ் ஊழியர் ஒருவர் வந்து சரிபார்த்துள்ளார். இப்போதே இன்போசிஸ் நிறுவனம் Alan Mamedi மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications