கொரோனா பெருந்தொற்றிற்குப் பிறகு முதல் முறையாக இந்திய மதுபான சந்தை வீழ்ச்சியை கண்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் பெரிய அளவிலான வளர்ச்சியைக் கண்ட மதுபான துறை, சில மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் அதிகரித்த வரிகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் மதுபான துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்திய மதுபான விற்பனை சந்தையில் விஸ்கி பெரும் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் இதன் விற்பனைளவில் செப்டம்பர் காலாண்டில் சுமார் 1% குறைந்துள்ளது, அதே நேரத்தில் பிராந்தி மற்றும் ரம் விற்பனை 3% மற்றும் 2% குறைந்துள்ளது. இருப்பினும், வோட்கா மற்றும் ஜின் ஆகியவற்றின் விற்பனை தனது லோவர் பேஸ் அளவில் இருந்து 17% மற்றும் 2% வளர்ச்சியைக் கண்டுள்ளது.

யுனைடெட் ஸ்பிரிட்ஸின் நிர்வாக இயக்குனர் ஹினா நாகராஜன் செப்டம்பர் மாத விற்பனை குறித்து கூறுகையில், மந்தமான பொருளாதார சூழல் மற்றும் வெள்ளத்தின் தாக்கம் காரணமாக கொரோனாவுக்கு பின்பு முதல் காலாண்டாக விற்பனை மந்தமாகியுள்ளது என்று கூறினார். இது தற்காலிக தடை மட்டுமே, நீண்ட கால போக்கு அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.
கொரோனாவுக்கு பின்பு ஆடை, காலணி மற்றும் அழகுசாதனப் பொருட்கள் போன்ற பிரிவுகளில் பதிவான விரைவான வளர்ச்சி காலகட்டத்திற்குப் பிறகு மந்தநிலையை அடைந்த பொதுவான நிலை தான் தற்போது மதுபானத் துறையிலும் ஏற்பட்டு உள்ளது.
ஜூலை-செப்டம்பர் காலாண்டில் இந்திய மதுபான சந்தை 101 மில்லியன் கேஸ்கள் விற்பனையை பதிவு செய்தது, கடந்த ஆண்டின் அதே காலாண்டில் 103 மில்லியன் கேஸ்கள் விற்பனையாகியது. கோவிட்-19 காலத்திற்கு பிந்தைய அதிகரிப்பிற்குப் பிறகு மதுபான விற்பனை சந்தை முதல் சரிவை சந்தித்து, நிலையான வளர்ச்சிப் பாதைக்குத் திரும்புகிறது என்று தொழில் வல்லுநர்கள் நம்புகின்றனர்.


Click it and Unblock the Notifications