இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ), அதன் ஆன்லைன் சேவைகளில் தற்காலிக பயன்பாட்டு தடை ஏற்படவுள்ளதாக வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.
எஸ்பிஐ வங்கியின் இண்டர்நெட் வங்கி, யூனோ லைட், யூனோ பிசினஸ், உள்ளிட்ட பல சேவைகள் செப்டம்பர் 7, 2025 அன்று அதிகாலை 1:20 முதல் 2:20 மணி வரை ஒரு மணி நேரம் டெக் பராமரிப்பு பணிகள் காரணமாக மக்கள் பயன்படுத்த முடியாது என அறிவித்துள்ளது.

எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, செப்டம்பர் 7, 2025 அன்று அதிகாலை 1:20 முதல் 2:20 மணி வரை, இண்டர்நெட் வங்கி, யூனோ லைட், யூனோ பிசினஸ் வலை மற்றும் மொபைல் செயலி, சிஐஎன்பி, மற்றும் யோனோ சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும்.
இந்த ஒரு மணி நேர பராமரிப்பு பணிகளின் போது, யுபிஐ லைட் மற்றும் ஏடிஎம் சேவைகள் தொடர்ந்து செயல்படும் என்று எஸ்பிஐ வங்கி உறுதியளித்துள்ளது. இந்த திட்டமிடப்பட்ட பராமரிப்பு, வங்கியின் டிஜிட்டல் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளது.
எஸ்பிஐ, இந்த தற்காலிக சேவை இடையூறு காரணமாக ஏற்படக்கூடிய பிரச்சனைகளை தவிர்க்க, வாடிக்கையாளர்கள் தங்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகளை முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இந்த பராமரிப்பு பணிகள் இரவு நேரத்தில் திட்டமிடப்பட்டு உள்ளதால் பாதிப்புகள் குறைவாக இருக்கும்.
இந்த ஒரு மணி நேர இடைவெளியில், இணைய வங்கி மற்றும் மொபைல் செயலி மூலம் பண பரிவர்த்தனைகள், கணக்கு சரிபார்ப்பு, அல்லது பிற சேவைகளைப் பயன்படுத்த முடியாது. இருப்பினும், யுபிஐ லைட் மற்றும் ஏடிஎம் வழியாக அவசர பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும் என்பது வாடிக்கையாளர்களுக்கு ஆறுதலாக உள்ளது.


Click it and Unblock the Notifications